ta_tw/bible/names/damascus.md

3.1 KiB

தமஸ்கு

உண்மைகள்:

தமஸ்கு சீரியா நாட்டின் தலைநகரம் ஆகும். இது வேதாகமக் காலங்களில் இருந்த அதே இடத்தில் இன்றும் இருக்கிறது.

  • தமஸ்கு உலகிலேயே பழமையான, தொடர்ந்து மக்கள் வசிக்கும் நகரங்களில் ஒன்றாகும்.
  • ஆபிரகாமின் காலத்தில், தமஸ்கு அராம் ராஜ்யத்தின் தலைநகரமாக இருந்தது (தற்போது சீரியாவில் அமைந்துள்ளது).
  • பழைய ஏற்பாடு முழுவதிலும், தமஸ்குவுக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் இடையேயான பரஸ்பர உறவுகளுக்கு பல குறிப்புகள் உள்ளன.
  • பல வேதாகம தீர்க்கதரிசனங்கள் தமஸ்குவின் அழிவை முன்னறிவிக்கின்றன. பழைய ஏற்பாட்டு காலங்களில் அசீரியா நகரத்தை அழித்தபோது இந்த தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின, அல்லது இந்த நகரத்தின் எதிர்காலம் இன்னும் முழுமையாக அழிக்கப்படலாம்.
  • புதிய ஏற்பாட்டில், பரிசேயனாகிய சவுல் (பின்னர் இவர் பவுல் என அழைக்கப்பட்டார்) தமஸ்கு நகரில் உள்ள கிறிஸ்தவர்களை கைதுசெய்வதற்கு முன்பாக இயேசு அவரை வழிநடத்தி அவரை ஒரு விசுவாசியாக மாற்றினார்

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: அராம், அசீரியா, [விசுவாசம், சீரியா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1833, H1834, G1154