ta_tw/bible/names/assyria.md

4.5 KiB

அசீரியா, அசீரியன், அசீரியர்கள், அசீரியப் பேரரசு

உண்மைகள்:

கானான் தேசத்தில் இஸ்ரவேலர் வாழ்ந்த காலத்தில், அசீரியா ஒரு பலம்பொருந்திய தேசமாக இருந்தார். அசீரிய சாம்ராஜ்யம் அசீரிய ராஜாவால் ஆட்சி செய்யப்பட்ட பல தேசங்களின் குழுவாக இருந்தது.

  • தற்போதைய ஈராக்கின் வடக்கு பகுதியாக உள்ள ஒரு பிராந்தியத்தில் அசீரியா தேசம் அமைந்திருந்தது.
  • அசீரியர்கள் வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில் இஸ்ரேலுக்கு எதிராகப் போரிட்டார்கள்.
  • கி.மு. 722 ஆம் ஆண்டில், அசீரியர்கள் இஸ்ரவேலின் ராஜ்யத்தை முற்றிலும் கைப்பற்றி, இஸ்ரவேலரில் அநேகரை அசீரியாவுக்குக் கொண்டு செல்லும்படி கட்டாயப்படுத்தினார்கள்.
  • மீதியான இஸ்ரவேலர், அசீரியர்கள் சமாரியாவிலிருந்து இஸ்ரவேலருக்குக் கொண்டுவந்த வெளிநாட்டினருடன் கலப்புத்திருமணம் செய்துகொண்டார்கள். கலப்புத்திருமணம் செய்துகொண்டவர்களின் சந்ததியினர் பின்னர் சமாரியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

(மேலும் காண்க: சமாரியா)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 20:2 எனவே தேவன் அவர்களை அழிக்க எதிரிகளை அனுமதிப்பதன் மூலம் தேவன் இரண்டு ராஜ்யங்களையும்தண்டித்தார். இஸ்ரேலின் இராஜ்ஜியம், ஒரு சக்திவாய்ந்த, கொடூரமான தேசமாகிய அசீரிய சாம்ராஜ்ஜியத்தால் அழிக்கப்பட்டது. அசீரியர்கள் இஸ்ரேல் இராஜ்ஜியத்தின் பல மக்களை கொன்றனர், மேலும் மதிப்பு அனைத்தையும் கொள்ளையடித்துவிட்டு, மற்றும் நாட்டின் பெரும்பாலானவற்றை எரித்தனர்.
  • 20:3 அசீரியர்கள் அனைத்து தலைவர்களும், செல்வந்தர்களையும், திறமையுள்ள மக்களையும் கூட்டி, அவர்களை அசீரியாவிற்கு அழைத்துச் சென்றனர்.
  • 20:4 பிறகு அசீரியர்கள் இஸ்ரவேலர்களை சிறையாகக்கொண்டு சென்றபிறகு அவர்களுக்குப் பதிலாக அந்நிய தேசத்தினரை கானானில் குடியமர்த்தினர்.

சொல் தரவு:

  • Strong's: H804, H1121