ta_tw/bible/kt/disciple.md

7.1 KiB

சீஷன், சீஷர்கள்

வரையறை:

" சீஷன் " என்ற வார்த்தை, ஆசிரியரின் குணாதிசயம் மற்றும் போதனையிலிருந்து கற்றுக்கொள்வதற்கான ஒரு ஆசிரியருடன் அதிக நேரம் செலவிடுகிற ஒரு நபரை குறிக்கிறது.

  • இயேசுவைப் பின்பற்றுவோர், அவருடைய போதனைகளைக் கேட்டு, அவற்றைக் கடைப்பிடித்து வந்தவர்கள் அவருடைய "சீஷர்கள்" என அழைக்கப்பட்டார்கள்.
  • யோவான்ஸ்நானனும் கூட சீஷர்களைக் கொண்டிருந்தான்.
  • இயேசுவின் ஊழியத்தின்போது, ​​பல சீஷர்கள் அவரைப் பின்பற்றி அவருடைய போதனைகளைக் கேட்டார்கள்.
  • இயேசு பன்னிரு சீஷர்களைத் தம் நெருங்கிய சீஷர்களாக தேர்ந்தெடுத்தார்; இந்த மனிதர்கள் அவருடைய "அப்போஸ்தலர்கள்" என அழைக்கப்பட்டனர்.
  • இயேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் தொடர்ந்து அவருடைய 'சீஷர்கள்' அல்லது 'பன்னிரண்டு பேர்' என்று அழைக்கப்படுகிறார்கள்.
  • இயேசு பரலோகத்திற்குச் செல்வதற்கு சற்று முன்பு, இயேசுவின் சீஷர்களாக மாறுவதற்கு மற்றவர்களுக்குப் போதிக்க வேண்டுமென தம் சீஷர்களிடம் கட்டளையிட்டார்.
  • இயேசுவை விசுவாசித்து அவருடைய போதனைகளைக் கடைப்பிடிப்பவர் இயேசுவின் சீடர் என்று அழைக்கப்படுகிறார்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "சீஷர்" என்ற வார்த்தை, "பின்பற்றுபவர்" அல்லது " "மாணவர்" அல்லது "கற்றுக்கொள்பவர்" என்று பொருள்படும் வார்த்தை அல்லது சொற்றொடரால் மொழிபெயர்க்கப்படலாம்.
  • இந்த வார்த்தையின் மொழிபெயர்ப்பு ஒரு வகுப்பறையில் கற்றுக் கொள்ளும் ஒரு மாணவரைக் குறிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
  • இந்த வார்த்தையின் மொழிபெயர்ப்பு "அப்போஸ்தலரின்" மொழிபெயர்ப்பிலிருந்து வேறுபட்டிருக்க வேண்டும்.

(மேலும் காண்க: அப்போஸ்தலன், நம்பிக்கை, இயேசு, யோவான் ஸ்நானகன்) , பன்னிரண்டு)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 30:8 அவர் (இயேசு) மக்களுக்கு கொடுக்கும்படியாக அவரது சீஷர்களிடம்_ துண்டுகள் கொடுத்தார். சீஷர்கள் உணவுகளைப் பகிர்ந்துகொடுத்தனர், ஆனால் அது ஒருபோதும் தீர்ந்துபோகவில்லை.
  • 38:1 இயேசு பிரசங்கிக்கவும் போதிக்கவும் ஆரம்பித்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இயேசு தம் சீஷர்களிடம், "எருசலேமில் இந்த பஸ்காவைக் கொண்டாட வேண்டுமென்று அவர் விரும்பினார் என்றும், அங்கே அவர் கொல்லப்படுவார் என்றும் சொன்னார்.
  • 38:11 பின்பு இயேசு தன்_சீஷர்களுடன்_ கெத்செமனே என்று அழைக்கப்படும் இடத்திற்குச் சென்றார். இயேசு சோதனைகுட்படாதபடி ஜெபம் செய்யும்படி சீஷர்களிடம் சொன்னார்.
  • 42:10 இயேசு தம் சீஷர்களிடம் கூறியது: "வானத்திலும் பூமியிலும் உள்ள எல்லா அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.

சொல் தரவு:

  • Strong's: H3928, G3100, G3101, G3102