ta_tw/bible/other/obey.md

6.3 KiB

கீழ்ப்படி, கீழ்ப்படிகிற, கீழ்ப்படிந்த, கீழ்ப்படிதல், கீழ்ப்படிதல், கீழ்ப்படிதலுள்ள, கீழ்ப்படியாமை, கீழ்ப்படியாமை, கீழ்ப்படியாமை, கீழ்ப்படியாமை, கீழ்ப்படியாத

வரையறை:

"கீழ்ப்படிதல்" என்ற வார்த்தை தேவை அல்லது கட்டளையிடப்பட்டதை செய்வதாகும். "கீழ்ப்படிதலுள்ள" என்ற வார்த்தை கீழ்ப்படிகிறவர்களை விவரிக்கிறது. "கீழ்ப்படிதல்" ஒரு கீழ்ப்படிதல் நபர் கொண்டிருக்கிற பண்பு ஆகும். சில நேரங்களில் "திருட வேண்டாம்" என்பதில் கட்டளைக்குக்கீழ்ப்படிந்து ஏதும் செய்யாமல் இருப்பதாகும்.

  • பொதுவாக, "கீழ்ப்படிதல்" என்பது அதிகாரத்தில் உள்ள ஒரு நபரின் கட்டளைகளை அல்லது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதன் சூழலில் பயன்படுத்தப்படுகிறது.
  • உதாரணமாக, ஒரு நாடு, ராஜ்யம் அல்லது பிற அமைப்புகளின் தலைவர்கள் உருவாக்கும் சட்டங்களை மக்கள் ஏற்கிறார்கள்.
  • குழந்தைகள் தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிகிறார்கள், அடிமைகள் தங்கள் எஜமானர்களுக்குக் கீழ்ப்படிகிறார்கள், மக்கள் தேவனுக்குக் கீழ்ப்படிகிறார்கள், குடிமக்கள் தங்கள் நாட்டிற்கான சட்டங்களுக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
  • அதிகாரத்தில் உள்ளவர்கள் எதைச் செய்யக்கூடாது என்று கட்டளையிட்டால், அவர்கள் அதைச் செய்யாமல் கீழ்ப்படிவார்கள்.
  • கீழ்ப்படிதலுக்கான வழிகள், "கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்" அல்லது "கீழ்ப்படியுங்கள்" அல்லது "தேவன் என்ன கட்டளையிடுகிறாரோ அதை செய்" என்று பொருள் கொள்ளலாம்.
  • "கீழ்ப்படிதல்" என்ற வார்த்தை "கட்டளையிடப்பட்டதை" அல்லது "கீழ்ப்படிதல்" அல்லது "தேவன் கட்டளையிடுவதைச் செய்வது" என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: குடிமகன், கட்டளை, கீழ்ப்படியாமை, இராச்சியம், சட்டம்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 3:4 நோவா தேவனுக்குக் கீழ்ப்படிந்தார். அவரும் அவருடைய மூன்று மகன்களும் தேவன் அவர்களுக்கு சொன்ன விதத்தின்படியே பேழையைக் கட்டினார்கள்.
  • 5:6 மீண்டும் ஆபிரகாம் தேவனுக்குக் கீழ்ப்படிந்து தன மகனைப் பலியிட ஆயத்தமானார்.
  • 5:10 "நீ (ஆபிரகாம்)கீழ்ப்படிந்ததால், உலகத்தின் எல்லா குடும்பங்களும் உன் குடும்பத்தினரிடமிருந்து ஆசீர்வதிக்கப்படும்"
  • 5:10 ஆனால் எகிப்தியர்கள் தேவனை நம்பவில்லை அல்லது அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை
  • 13:7 இந்த சட்டங்களை மக்கள் கீழ்ப்படிந்தால், தேவன் அவர்களை ஆசீர்வதிப்பார், பாதுகாப்பார் என்று உறுதியளித்தார்.

சொல் தரவு:

  • Strong's: H1697, H2388, H3349, H4928, H6213, H7181, H8085, H8086, H8104, G191, G544, G3980, G3982, G4198, G5083, G5084, G5218, G5219, G5255, G5292, G5293, G5442