ta_tw/bible/kt/fulfill.md

6.2 KiB

பூர்த்தி, பூர்த்திசெய்யப்பட

வரையறை:

"நிறைவேற்று" என்ற வார்த்தை எதிர்பார்க்கப்படும் ஏதோவொன்றை நிறைவு செய்ய அல்லது நிறைவேற்ற வேண்டும் என்பதாகும்.

  • தீர்க்கதரிசனம் நிறைவேறுகையில், தீர்க்கதரிசனத்தில் முன்னறிவிக்கப்பட்டதை தேவன் நடத்துவார் என்று அர்த்தம்.
  • ஒரு நபர் வாக்குறுதியையோ அல்லது பொருத்தனையையோ நிறைவேற்றினால், அவர் என்ன பொருத்தனை செய்தார் என்பதை அவர் உறுதிப்படுத்துகிறார்.
  • ஒரு பொறுப்பை நிறைவேற்றுவது என்பது கொடுக்கப்பட்ட பணியைச் செய்வது அல்லது அவசியமான பணியைச் செய்ய வேண்டும் என்பதாகும்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • சூழலைப் பொறுத்து, "நிறைவேற்ற"என்பது "முழுமையானது" அல்லது "நடக்கக்கூடியது" அல்லது "கீழ்ப்படிதல்" அல்லது "செய்" என்று மொழிபெயர்க்கலாம்.
  • "நிறைவேறியது" என்ற சொற்றொடர் "நடந்துவிட்டது" அல்லது "நடந்தது" அல்லது "நடைபெற்றது" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • "உங்கள் ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு என்பதை " "நிறைவேற்றுவது" என மொழிபெயர்ப்பதற்கான வழிகள் "முழுமையானவை" அல்லது "செய்" அல்லது "நடைமுறையில்" அல்லது "தேவன் நீங்கள் செய்யும்படி அழைத்தபடியே மற்றவர்களுக்கு ஊழ்ஜியம்செய்" என்பது அடங்கும்.

(மேலும் காண்க: தீர்க்கதரிசி, கிறிஸ்து, ஊழியக்காரன், அழைப்பு)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 24:4 யோவான்,: "நான் என் தூதரை உங்களுக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்குப் பாதைகளை ஆயத்தம் பண்ணுவான் என்று தீர்க்கதரிசிகள் கூறியதை நிறைவேற்றினான்.
  • 40:3 போர்வீரர்கள் இயேசுவின் ஆடைக்காக சீட்டுப் போட்டார்கள். அவர்கள் இதை செய்தபோது, ​​அவர்கள் என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் வஸ்திரங்களை எடுத்துக்கொண்டார்கள் என்று சொல்லியிருந்த தீர்க்கதரிசனம்_நிறைவேறியது_.
  • 42:7 இயேசு சொன்னார், "தேவனுடைய வார்த்தையில் என்னைப் பற்றி எழுதப்பட்ட அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களுக்குச் சொன்னேன்."
  • 43:5 "கடைசி நாட்களில், என் ஆவியை ஊற்றுவேன்" என்றுதேவன் யோவேல் தீர்க்கதரிசிமூலம் சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறியது.
  • 43:7 "இந்த பரிசுத்தவான்களின் கல்லறைக்குள் நீ காண விடமாட்டாய்" என்று சொல்லும் தீர்க்கதரிசனம் நிறைவேறியது.
  • 44:5 "நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், தேவன் உங்கள் செயல்களை மேசியா அனுபவிக்கப்போகும் மற்றும் மரிக்கும் தீர்க்கதரிசனங்களுக்கு நிறைவேறுதலாக பயன்படுத்தினார்."

சொல் தரவு:

  • Strong's: H1214, H5487, G1096, G4138