ta_tw/bible/kt/call.md

9.2 KiB
Raw Permalink Blame History

கூப்பிடு, அழைப்புகள், அழைப்பு, அழைக்கப்பட்ட

வரையறை:

"அழை" மற்றும் "அழைப்பு" என்ற சொற்கள் அருகே இல்லாமல் தூரமாக இருக்கும் ஒருவரை சத்தமாக கூப்பிடுவதாகும். யாரையாவது "கூப்பிடு" என்பது அந்த நபரை அழைப்பதாகும். வேறு சில அர்த்தங்களும் உள்ளன.

  • ஒருவரை "அழைப்பது" , தூரமாக இருக்கும் நபருடன் சத்தமாக உரக்க பேசுகிறார்கள் அல்லது உரத்த குரலில் பேசுகிறார்கள் என்று பொருளாகும். உதவிக்காக ஒருவரிடம், குறிப்பாக தேவனிடம் கேட்பத்தாகும்.
  • பெரும்பாலும் வேதாகமத்தில், "அழைப்பு" என்பது "கூட்டிச் சேர்த்தல்" அல்லது "வருவதற்குக் கட்டளை" கொடுத்தல் அல்லது "வரும்படி வேண்டிக்கொள்வது ஆகியவற்றைக்" குறிக்கிறது.
  • தேவன் மக்களை அவரிடம் வந்து, அவருடைய மக்களாக இருப்பதற்கு அழைக்கிறார். இது அவர்களின் அழைப்பு.
  • தேவன் மக்களை 'அழைக்கிறார்' என்றால், அதாவது தேவன் தம் மக்களை அவருடைய ஊழியர்களாகவும் இயேசுவின் மூலமாக அவருடைய இரட்சிப்பின் செய்தியை அறிவிப்பவர்களாகவும் நியமித்திருக்கிறார் அல்லது தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று அர்த்தம்.
  • இந்த வார்த்தை ஒருவருக்குப் பெயரிடும் பின்னணியில் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, "அவருடைய பெயர் யோவான் என்று அழைக்கப்படுகிறார் என்றால்", "அவர் யோவான் என்று பெயரிடப்பட்டார்" அல்லது "அவருடைய பெயர் யோவான்" என்று பொருள்.
  • "பெயரால் அழைக்கப்படுதல்" என்பது வேறு யாராவது ஒருவர் இன்னொருவருக்குப் பெயரைக் கொடுத்தல் என்பதாகும். தாம் தம்முடைய தம் மக்களை பெயரிட்டு அழைத்திருக்கிறார் என்று தேவன் சொல்கிறார்.
  • ஒரு வித்தியாசமான வெளிப்பாடு, "நான் உங்களை பெயரிட்டு அழைத்தேன்" என்றால் தேவன் குறிப்பாக அந்த நபரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று அர்த்தமாகிறது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "அழைப்பு" என்ற வார்த்தையானது, "அழைப்பிற்கு" என்று பொருள்படும் ஒரு வார்த்தையால் மொழிபெயர்க்க முடியும், இது வேண்டுமென்றே அழைக்கப்படுதல் அல்லது உள்நோக்கத்துடன் அழைக்கப்படுதல் என்ற கருத்தை உள்ளடக்கியது.
  • "உங்களிடம் கூப்பிடுங்கள்" என்ற சொற்றொடரை "உங்களிடம் உதவி கேட்கும்படி" அல்லது "அவசரமாக உங்களிடம் ஜெபம் செய்யுங்கள்" என மொழிபெயர்க்கலாம்.
  • தேவன் நம்மை 'தம்முடைய ஊழியக்காரராக' அழைத்திருக்கிறார் என வேதாகமம் சொல்கையில், இது "சிறப்பாக நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்," அல்லது "நம்மை நியமித்திருக்கிறார்" என மொழிபெயர்க்கலாம்.
  • "நீங்கள் அவருடைய பெயரை அழைக்க வேண்டும் என்பதை", "நீங்கள் அவரைப் பெயரிட்டுஅழைக்க வேண்டும். எனவும் மொழிபெயர்க்கலாம் "
  • "என்று அவருடைய பெயர்"அழைக்கப்படுகிறது என்பதை, "அவருடைய பெயர்" அல்லது "அவர் பெயர்" என்று மொழிபெயர்க்கலாம்.
  • "கூப்பிடு" என்பதை, "சத்தமாக சொல்லுங்கள்" அல்லது "கத்தி" அல்லது "உரத்த குரலில் சொல்" என்று மொழிபெயர்க்கலாம். மொழிபெயர்ப்பானது அந்த நபரின் கோபத்துடன் கூறுவதைப்போன்ற ஒலி இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
  • "உங்கள் அழைப்பு" என்ற சொற்றொடரை "உங்களுடைய நோக்கம்" அல்லது "உங்களுக்காக தேவனுடைய நோக்கம்" அல்லது "உங்களுக்காகதேவனுடைய விசேஷ வேலை" என்று மொழிபெயர்க்கலாம்.
  • "கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள் என்பதை அவரை சார்ந்து " "கர்த்தரைத் தேடுங்கள், " அல்லது "கர்த்தரிடத்தில் நம்பிக்கையாயிருந்து, அவருக்குக் கீழ்ப்படிவோம்" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • "தேவைக்காக "என்பது ஏதாவது கோரிக்கை" அல்லது "கேட்க" அல்லது "கட்டளை" என்று மொழிபெயர்க்க முடியும்.
  • "நீங்கள் என் பெயரால் அழைக்கப்படுகிற" என்ற வார்த்தையை, "நீங்கள் எனக்குச் சொந்தமானவர்கள், ஆகவே, என் பெயரைக் கொடுத்திருக்கிறேன்" என்று மொழிபெயர்க்கலாம்.
  • "நான் உன்னைப் பெயரிட்டு அழைத்தேன்" என்று தேவன் சொன்னபோது, "நான் உன்னை அறிந்திருக்கிறேன், உன்னைத் தெரிந்துகொண்டேன்" என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: ஜெபம்)

வேதாகமக் குறிப்புகள்:

{{tag>publish ktlink }

சொல் தரவு:

  • Strong's: H559, H2199, H4744, H6817, H7121, H7123, G154, G363, G1458, G1528, G1941, G1951, G2028, G2046, G2564, G2821, G2822, G2840, G2919, G3004, G3106, G3333, G3343, G3603, G3686, G3687, G4316, G4341, G4377, G4779, G4867, G5455, G5537, G5581