ta_tw/bible/kt/minister.md

3.6 KiB
Raw Permalink Blame History

ஊழியன், ஊழியம்

வரையறை:

வேதாகமத்தில், "ஊழியம்" என்ற வார்த்தை தேவனைப் பற்றி கற்பிப்பதன் மூலமும் தங்கள் ஆவிக்குரிய தேவைகளை கவனிப்பதன் மூலமும் மற்றவர்களுக்கு சேவை செய்வதைக் குறிக்கிறது.

  • பழைய ஏற்பாட்டில், ஆசாரியர்கள் ஆலயத்தில் தேவனுக்கு ஊழியர்களாக இருப்பார்கள்.
  • அவர்களுடைய "ஊழியம்" ஆலயத்தை கவனித்துக்கொண்டும், மக்கள் சார்பாக தேவனிடம் ஜெபம் செய்வதையும் உட்படுத்துகிறது.
  • மக்களுக்கு "ஆராதனை" செய்வது, தேவனைப் பற்றி கற்றுக்கொள்வதன் மூலம் ஆவிக்குரிய ரீதியில் அவர்களை உதவி செய்வதாகும்.
  • நோயாளிகளுக்கான கவனிப்பு மற்றும் ஏழைகளுக்கு உணவளித்தல் போன்ற உடல் வழிகளில் மக்களைச் சேர்ப்பதை இது குறிக்கலாம்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • மக்களுக்கு சேவை செய்யும் சூழ்நிலையில், "ஊழியன்" என்று "சேவை செய்ய" அல்லது "கவனித்துக்கொள்வது" அல்லது "தேவைகளை பூர்த்தி செய்வது" என்று மொழிபெயர்க்கலாம்.
  • ஆலயத்தில் ஊழியம் செய்யும்போது, "ஊழியன்” என்ற வார்த்தை "ஆலயத்தில் தேவனை சேவிக்கும்" அல்லது "மக்களுக்காக தேவனுக்குப் பலிகொடுக்க வேண்டும்" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • தேவனைச் சேவிப்பதன் பின்னணியில், இது 'சேவையாக' அல்லது 'தேவனுடைய வேலை' என மொழிபெயர்க்கப்படலாம்.
  • "பணியாற்றும்" சொற்றொடர் "கவனித்துக்கொள்ளப்பட்ட" அல்லது "வழங்கப்பட்ட" அல்லது "உதவியது" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: சேவை, பலி)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H6399, H8120, H8334, H8335, G1247, G1248, G1249, G2023, G2038, G2418, G3008, G3009, G3010, G3011, G3930, G5256, G5257, G5524