ta_tw/bible/names/canaan.md

4.6 KiB
Raw Permalink Blame History

கானான், கானானியர், கானானியர்கள்

உண்மைகள்:

கானான், நோவாவின் மகன்களில் ஒருவராக இருந்த காமின் மகன் ஆவான். கானானியர் கானானின் சந்ததியினர் ஆவர்.

  • "கானான்" அல்லது "கானானின் நிலம்" என்ற வார்த்தை யோர்தான் நதிக்கும் மத்தியதரைக் கடலுக்கும் இடையில் நிலப்பகுதியைக் குறிக்கிறது. அது தெற்கே எகிப்தின் எல்லையிலும், வடக்கிலும் சிரியாவின் எல்லையிலும்,பரந்து விரிந்துள்ளது.
  • கானானியர்களும், அதேபோல பல மக்கள் கூட்டமும் இந்த நிலத்தில் வாழ்ந்தனர்.
  • ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததியாராகிய இஸ்ரவேலருக்கும் கானான் தேசத்தை கொடுப்பதாக தேவன் வாக்குறுதி அளித்தார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: காம், வாக்களிக்கப்பட்ட நிலம்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 4:5 அவன் (ஆபிராம்) தன் மனைவியான சாராயையும், அவன் ஊழியக்காரர் அனைவரையும், தனக்கு உண்டான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, தேவன் தனக்குக் காண்பித்த காணான் தேசத்துக்குப் போய், அங்கே குடியிருந்தான்.
  • 4:6 ஆபிராம் கானானில் வந்தபோது தேவன், "உன்னைச் சுற்றிலும் பார் என்று சொன்னார். உனக்கும் உன் சந்ததியாருக்கும் நீ காணும் தேசம் அனைத்தையும் நான் உனக்கு சுதந்தரமாகக் கொடுப்பேன். "
  • 4:9 "நான் உங்கள் சந்ததிகளுக்கு கானான் நிலம் கொடுக்கிறேன்."
  • 5:3"நான் உனக்கும் உன் சந்ததிக்கும்_கானானை_அவர்களுக்குச் சொத்தாகக் கொடுப்பேன்.மேலும் நான் அவர்கள் தேவனாக என்றென்றும் இருப்பேன்.
  • 7:8 கானானிலிருந்த தன் வீட்டைவிட்டுச் சென்றிருந்த யாக்கோபு இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, வந்தபோது, தனது குடும்பத்தார்களோடும், வேலைக்காரர்களோடும், மிருகஜீவன்களோடும்கூட திரும்பி வந்தார்.

சொல் தரவு:

  • Strong's: H3667, H3669, G2581, G5478