ta_tw/bible/kt/consecrate.md

4.2 KiB

பரிசுத்தப்படுத்து, பரிசுத்தப்படுத்தப்பட்ட, பரிசுத்தப்படுத்தப்படுதல்

வரையறை:

தேவனை சேவிக்க ஏதாவது ஒன்றை அல்லது யாரையாவது அர்ப்பணிப்பதற்காக பரிசுத்தப்படுத்துவதாகும்-. பரிசுத்தமாக்கப்படும் ஒரு பொருள் அல்லது ஒரு நபர் தேவனுக்காக பரிசுத்தமாக்கப்பட்டு அவருக்காக வேறு பிரிக்கப்படுகிறார் என்றுபொருளாகும்.

  • இந்த வார்த்தையின் அர்த்தம் "பரிசுத்தமாக்குதல்" அல்லது "பரிசுத்தமாக்குதல்" என்பதற்கு இணையானதாகும், ஆனால் கூடுதல் அர்த்தத்துடன் தேவனுக்குச் சேவை செய்வதற்கு யாரையாவது முறையாக ஏற்படுத்துவதாகும்..
  • தேவனுக்காகப் பரிசுத்தமாக்கப்பட்டவைகள், பொருட்கள், பலி செலுத்தப்படும் மிருகங்கள், சர்வாங்க தகனபலி செலுத்தப்படும் பலிபீடம்,மற்றும் ஆசரிப்பு கூடாரம் ஆகியவை ஆகும்.
  • தேவனுக்குப் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் யாரென்றால், ஆசாரியர்கள், இஸ்ரவேல் ஜனங்கள், பெரியஆண் குழந்தைகள் ஆகியோர் ஆவர்.
  • சில சமயங்களில் "பரிசுத்தமாக்குதல்" என்பது "சுத்திகரிப்பது", என்பதற்கு இணையான அர்த்தமுடைய அதாவது தேவனுடைய ஊழியத்திற்காக மக்களுக்கு அல்லது காரியயங்களை ஆயத்தப்படுத்துவது போலவே, அவர்கள் சுத்திகரிக்கப்பட்டும், ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும் ஒரு அர்த்தம் கொண்ட வார்த்தையாகும்..

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "பரிசுத்தமானதை" என்பதை மொழிபெயர்க்கும் வழிகள், "தேவனுடைய சேவைக்காக வேறுபிரிப்பது" அல்லது "தேவனுக்கு சேவை செய்வதற்காக சுத்திகரிக்கபடுவது " ஆகியனவாகும்.
  • "பரிசுத்தம்" மற்றும் "பரிசுத்தமாக்குதல்" என்ற சொற்கள் எவ்வாறு மொழிபெயர்க்கப்படுகின்றன என்பதைக் கவனியுங்கள்.

(மேலும் காண்க: பரிசுத்தம், தூய்மையான, பரிசுத்தமாக்குதல்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2763, H3027, H4390, H4394, H5144, H5145, H6942, H6944, G1457, G5048