ta_tw/bible/kt/baptize.md

9.2 KiB
Raw Permalink Blame History

ஞானஸ்நானம் கொடு, ஞானஸ்நானம் கொடுக்கப்பட்ட, ஞானஸ்நானம்

விளக்கம்:

புதிய ஏற்பாட்டில், "ஞானஸ்நானம் கொடு " மற்றும் "ஞானஸ்நானம்" என்ற சொற்கள் வழக்கமாக ஒரு கிறிஸ்தவனை மார்க்கரீதியாக தண்ணீரால் நனைக்கவும், அவர் பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்டதாகவும் கிறிஸ்துவோடு ஒற்றுமையுடன் இருப்பதையும் காட்டுவதாகவும் குறிப்பிடுகிறது.

  • தண்ணீர் ஞானஸ்நானம் தவிர, "பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம்" மற்றும் "அக்கினியினால் ஞானஸ்நானம்" ஆகியவற்றைப்பற்றி வேதாகமம் பேசுகிறது.
  • "ஞானஸ்நானம்" என்ற வார்த்தை வேதாகமத்தில் பெரும் துன்பத்தை அனுபவிப்பதை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • ஒரு நபர் தண்ணீரில் ஞானஸ்நானம் எடுப்பதைப் பற்றி கிறிஸ்தவர்கள் வித்தியாசமான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள். இந்த வார்த்தையை ஒரு பொதுவான முறையில் மொழிபெயர்ப்பது சிறந்தது, அது தண்ணீரைப் பயன்படுத்துவதற்கான பல்வேறு வழிகளில் அனுமதிக்கிறது.
  • சூழ்நிலையைப் பொறுத்து, "ஞானஸ்நானம்" என்ற வார்த்தை "சுத்திகரிக்கப்படுதல்," "ஊற்றப்படுதல்," "மூழ்குதல் (அல்லது அமிழ்த்துதல்," "கழுவுதல்", அல்லது "ஆன்மீக சுத்திகரிப்பு" என மொழிபெயர்க்கப்படலாம். உதாரணமாக, "தண்ணீரில் ஞானஸ்நானம் பெறுங்கள்" என்பதை தண்ணீரில் மூழ்கவும் என்று. மொழிபெயர்க்கலாம், "
  • "ஞானஸ்நானம்" என்ற வார்த்தை "சுத்திகரிப்பு", "ஊற்றப்படுதல்," "நனைத்தல்," "தூய்மைப்படுத்துதல்", அல்லது "மார்க்கரீதியான கழுவுதல்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • அது துன்பத்தை குறிக்கும் போது, "ஞானஸ்நானம் என்பதை" "கொடூரமான துயரத்தின் காலமாக" அல்லது "கடுமையான துன்பத்தின் மூலம் ஒரு சுத்திகரிப்பு" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • உள்ளூர் அல்லது தேசிய மொழியில் வேதாகமம் மொழிபெயர்ப்பில் எப்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கவனியுங்கள்.

(மேலும் காண்க: தெரியாதவைகளை மொழிபெயர்ப்பது எப்படி

(மேலும் காண்க: யோவான்ஸ்நானகன்) ), மனந்திரும்புங்கள், பரிசுத்த ஆவியானவர்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 24:3 யோவானின் செய்தியை மக்கள் கேட்டபோது, ​​அவர்களில் பெரும்பாலோர் தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பினர், மேலும் யோவான் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். பலமார்க்கத் தலைவர்கள் யோவான் மூலமாக ஞானஸ்நானம் பெறவந் தனர், ஆனால் அவர்கள் மனந்திரும்பவில்லை அல்லது தங்கள் பாவங்களை அறிக்கையிடவில்லை.
  • 24:6 அடுத்த நாள், இயேசு யோவான் மூலம் பெற வந்தார்.
  • 24:7 யோவான் இயேசுவிடம், "நான் உமக்கு ஞானஸ்நானம் கொடுக்குமளவு நான் தகுதியானவன் அல்ல என்று கூறினான்.. அதற்கு பதிலாக நீங்கள் எனக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும். "
  • 42:10 எனவே, நீங்கள் போய், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் சகல ஜனங்களையும் சீஷராக்குங்கள்; நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள் என்றார்.
  • 43:11 பேதுரு அவர்களுக்குப் பதிலளித்தார்: "உங்கள் பாவங்களை தேவன் மன்னிப்பதற்காக, நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவின் பெயரால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்.”
  • 43:12 சுமார் 3,000 பேர் பேதுரு சொன்னதை நம்பி இயேசுவின் சீஷர்களானார்கள். அவர்கள் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டு எருசலேம் தேவாலயத்தின் அங்கத்தினர்களாக மாறினார்கள்.
  • 45:11 பிலிப்புவும் எத்தியோப்பியனும் பயணித்தபோது, ​​அவர்கள் தண்ணீருக்கு அருகில் வந்தார்கள். எத்தியோப்பியன் சொன்னார், "பார்! கொஞ்சம் தண்ணீர் உள்ளது! என்று சொன்னான். நான் ஞானஸ்நானம் பெற முடியுமா? "
  • 46:5 சவுலால் உடனடியாக மீண்டும் பார்க்க முடிந்தது. அனனியா அவனுக்கு_ஞானஸ்நானம் கொடுத்தார்.
  • 49:14 இயேசு அவரை நம்பும்படியாகவும் மற்றும் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளவும் உங்களை அழைக்கிறார்.

சொல் தரவு:

  • Strong's: G907