ta_tw/bible/kt/crucify.md

5.9 KiB

சிலுவையிலறை, சிலுவையிலறையப்பட்ட

வரையறை:

"சிலுவையில் அறையப்படுதல்" என்பது ஒருநபரை ஒரு சிலுவையில் அறைந்து, அந்தநபர் துன்பத்துடனும், பெரும் வேதனையில் இறந்துவிடும்படி செய்வதாகும்.

  • பாதிக்கப்பட்டவர் சிலுவையில் கட்டப்படுவார் அல்லது ஆணியால் அறையப்படுவார். இரத்த இழப்பு அல்லது மூச்சுத்திணறல் ஆகியவற்றினால் சிலுவையில் அறையப்பட்டவர்கள் இறந்தனர்.
  • பழங்கால ரோம சாம்ராஜ்ஜியமானது கொடூரமான குற்றவாளிகளை அல்லது அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு எதிராக கலகம் செய்தவர்களை தண்டிப்பதற்கும் கொல்லுவதற்கும் இந்த மரண தண்டனையை அடிக்கடி பயன்படுத்தியது.
  • யூத மதத் தலைவர்கள் ரோம ஆளுநரிடம் இயேசு சிலுவையில் அறையும்படி தம் வீரர்களை உத்தரவிடும்படிக் கேட்டார்கள். போர்வீரர்கள் இயேசுவை சிலுவையில் ஆணிகளால் அறைந்தார்கள். அவர் அங்கு ஆறு மணி நேரம் அவதிப்பட்டார், பின்னர் மரித்தார்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "சிலுவையில் அறையுங்கள்" அல்லது "சிலுவையில் கொல்லுங்கள்" அல்லது "சிலுவையில் அறைந்து கொல்லுங்கள் " என மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: சிலுவை, ரோம்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • __39:11__ஆனால் யூதத் தலைவர்களும் கூட்டத்தாரும், "அவரை (இயேசு) சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள்!"
  • __39:12_பிலாத்து, மக்கள் கலகம்செய்யத் துவங்குவார்கள் என்று பயந்தான். எனவே, அவன் இயேசுவை_சிலுவையில் அறையும்படி தம் வீரர்களுக்குக் கட்டளையிட்டான். அவன் இயேசு கிறிஸ்துவைக் கொல்வதில் முக்கிய பங்கு வகித்தான்.
  • 40:1 வீரர்கள் இயேசுவை ஏளனம் செய்த பிறகு, அவரை சிலுவையில் அறைவதற்காக அவரைக் கொண்டுசென்றனர். அவர் அறையப்படப்போகும் சிலுவையை அவர் சுமக்கும்படி செய்தார்கள்.
  • 40:4 இயேசுவை இரண்டு கொள்ளையர்கள் இடையே _சிலுவையில் அறைந்தனர்.
  • 43:6 "இஸ்ரவேல் மனுஷரே, இயேசு நீங்கள் கண்டு அறிந்திருக்கிறபடியே, பல வல்லமையான அடையாளங்களையும் அற்புதங்களையும் தேவனுடைய வல்லமையினால் செய்தார். ஆனால் நீங்கள் அவரை சிலுவையில் அறைந்தீர்கள்! "
  • 43:9 "இந்த மனிதனாகிய இயேசுவை சிலுவையில் அறைந்தீர்கள்.
  • __44:8__பேதுரு அவர்களிடம், "உங்களுக்கு எதிரே நிற்கிற இந்த மனிதன் மேசியாவாகிய இயேசுவின் வல்லமையால் குணமடைந்தவர் என்று கூறினார். நீங்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தீர்கள், ஆனால் இயேசுவை தேவன் உயிரோடெழுப்பினார்! "

சொல் தரவு:

  • Strong's: G388, G4362, G4717, G4957