ta_tw/bible/other/watchtower.md

2.8 KiB

காவற்கோபுரம், காவற்கோபுரங்கள்,கோபுரம்

விளக்கம்:

“காவற்கோபுரம்” என்ற பதம் காவலாளர்கள் ஏதேனும் ஆபத்து வருகிறதா என்று ஏறிநின்று கண்காணிப்பதற்காக உயரமாகக் கட்டப்பட்ட கட்டிடத்தைக் குறிக்கிறது. பொதுவாக இந்த கோபுரங்கள் கற்களால் கட்டப்பட்டன.

  • நிலா உரிமையாளர்கள் தங்களுடைய வேளாண்மையைப் பாதுகாக்கும்படியாகவும், திருட்டுப் போகாதபடி பாதுகாக்கவும் சிலநேரங்களில் காவற்கோபுரங்களைக் கட்டினார்கள்.
  • இந்தக் காவற்கோபுரங்களில் அறைகள் இருந்தன. அவைகளில் காவலாளனும்அவனுடைய குடும்பத்தினரும் குடியிருந்துகொண்டு, இரவு பகலாக வேளாண்மையை பாதுகாப்பார்கள்.
  • நகரத்தினுடைய காவற்கோபுரங்கள், எதிரிகள் வருகிறார்களா என்பதை காவலாளர்கள் கவனிக்கதாக, நகரத்தின் சுவர்களைப் பார்க்கிலும் உயரமாகக் கட்டப்பட்டன.
  • “காவற்கோபுரம்” என்ற பதம் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதின் அடையாளமாக பயன்படுகிறது. (பார்க்க: உருவகம்)

(மேலும் பார்க்க: எதிரி, கவனி)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H803, H969, H971, H975, H1785, H2918, H4024, H4026, H4029, H4692, H4707, H4869, H6076, H6438, H6836, H6844, G4444