ta_tw/bible/other/watch.md

4.3 KiB

கவனி, கவனிக்கிறான், கவனிக்கப்பட்ட, காவலாளன், காவலாளர்கள், எச்சரிக்கையுடன் இருக்கிற

விளக்கம்:

“கவனி” என்ற பதத்தின் பொருள், ஒரு காரியத்தை மிகவும் உன்னிப்பாகவும், கவனமாகவும் பார்த்தல் என்பதாகும். இதற்கு அநேக உருவகமான அர்த்தங்கள் இருக்கின்றன. ஒரு “காவலாளன்” என்பவன், ஒரு நகரத்தின் மக்களை எந்தவொரு ஆபத்து அல்லது பயமுறுத்துதல் அணுகாதபடி மிகக் கவனமாக கண்காணித்து அந்த நகரத்தைக் காவல்காக்கும் பணியைச் செய்பவன் ஆவான்.

  • “உன்னுடைய வாழ்க்கையையும் உபதேசத்தையும் கவனமாக கவனி” என்று கட்டளையிடுதல் என்பது ஞானமாக வாழ்வதற்கு கவனமாக இரு என்றும் தவறான உபதேசங்களை நம்பாதே என்றும் அர்த்தமாகும்.
  • “முன்னெச்சரிக்கையுடன் இரு” என்பது ஆபத்துக்களையும்,தீங்கு விளைவிக்கக்கூடியவைகளையும் கவனமாகத் தவிர்த்தல் ஆகும்.
  • “கவனி” அல்லது “கவனித்துக்கொண்டிரு“ என்றால் எப்பொழுதும் எச்செரிக்கையுடன் இருத்தல் என்றும் பாவத்திலிருந்தும் தீமையிலிருந்தும் விலகியிருத்தல் என்பதாகும். இதற்கு “ஆயத்தமாக இரு” என்றும் அர்த்தம் உண்டு.
  • “பராமரித்தல்” அல்லது “உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிரு” என்பது, காவல்காப்பது, பாதுகாப்பது, அல்லது ஒரு நபரையோ அல்லது ஒரு காரியத்தையோ பராமரிப்பது என்றும் அர்த்தமாகும்.
  • “கவனி” என்ற வார்த்தையின் வேறு வகை மொழிபெயர்ப்பில், “அதிகக் கவனம் செலுத்து” அல்லது “கண்ணும்கருத்துமாக இரு” அல்லது “மிகுந்த எச்சரிக்கையுடன் இரு”அல்லது “பாதுகாத்துக்கொண்டிரு” என்பவைகளையும் உள்ளடக்க முடியும்..
  • “காவலாளன்” என்பதன் மற்ற வார்த்தைகள் “புறக்காவல் வீரர், அல்லது பாதுகாப்பாளன் என்பதாகும்.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H821, H2370, H4929, H4931, H5027, H5341, H5894, H6486, H6822, H6836, H6974, H7462, H7789, H7919, H8104, H8108, H8245, G69, G70, G991, G1127, G1492, G2334, G2892, G3525, G3708, G3906, G4337, G4648, G5083, G5438