ta_tw/bible/names/artaxerxes.md

3.3 KiB

அர்த்தசெஷ்டா

உண்மைகள்:

அர்த்தசெஷ்டா பெர்சிய சாம்ராஜ்ஜியத்தை கி.மு 464 முதல் கி.மு 424 வரை ஆட்சி செய்து வந்த அரசனாவார்.

  • அர்தசஷ்டாவின் ஆட்சியில், யூதாவைச் சேர்ந்த இஸ்ரவேலர்கள் பாபிலோனுக்கு சிறையாகக் கொண்டுபோகப்பட்டார்கள்; பாபிலோன் அந்த நேரத்தில் பெர்சியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.
  • பாபிலோனியரை விட்டு, எருசலேமுக்குச் சென்று தேவனுடைய கட்டளைகளை இஸ்ரவேலருக்குக் கற்றுக்கொடுக்க ஆசாரியனாகிய எஸ்றாவுக்கும் மற்ற யூதத் தலைவர்களுக்கும் அர்தசஷ்டாவுக்கு அனுமதி கொடுத்தார்.
  • அதற்குப்பின்பு இந்த காலக்கட்டத்தில், அர்தசஷ்டா, எருசலேமுக்குத் திரும்பிச செல்லவும் அந்நகரைச் சுற்றிலும்உள்ள சுவர்களை மீண்டும் கட்டியெழுப்ப யூதர்களை வழிநடத்துவதற்கு, ​​தன் பானபாத்திரக்காரனான நெகேமியாவுக்கு அனுமதி கொடுத்தார்.

பாபிலோன் பெர்சிய சாம்ராஜ்ஜியத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததால், அர்தசஷ்டாவை சில சமயங்களில் "பாபிலோன் ராஜா" என்று அழைத்தார்கள்.

  • அர்தசஷ்டா என்பவன், அகாஸ்வேரு அல்ல (ஒரே நபர்அல்ல) என்பதைக் கவனியுங்கள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை மொழிபெயர்த்தல்)

(மேலும் காண்க: அகாஸ்வேரு, பாபிலோன், பானபாத்திரக்காரன், எஸ்றா, நெகேமியா, பெர்சியா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H783