ta_tw/bible/names/esther.md

2.8 KiB

எஸ்தர்

உண்மைகள்:

எஸ்தர் யூதர்களின் பாபிலோனிய சிறையிருப்பின் காலத்தில் பெர்சிய ராஜ்யத்தின் ராணி ஆன ஒரு யூத பெண் ஆவாள்.

  • எஸ்தர் எவ்வாறு பெர்சியா ராஜாவாகிய அகாஸ்வேருவின் மனைவியாக ஆனாள் என்றும், தன் மக்களை காப்பாற்ற தேவன் அவளை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை எஸ்தர் புத்தகம் சொல்கிறது.
  • எஸ்தர், தனது தெய்வபக்தியுள்ள வயதுமூத்த உறவினரான மொர்தெகாயால் வளர்க்கப்பட்ட ஒரு அனாதையாக இருந்தாள்.
  • தன் வளர்ப்பு தந்தைக்கு கீழ்ப்படிந்ததால் அவள் தேவனுக்கும் கீழ்ப்படிந்தாள்.
  • எஸ்தர் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, யூதர்களாகிய தம் மக்களை மீட்பதற்காக தன் உயிரை பணயம் வைத்தாள்.
  • எஸ்தரின் கதை, வரலாற்றின் சம்பவங்களின் மீது தேவனுடைய சகல ஆளுகையின் கட்டுப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது, குறிப்பாக தம் மக்களைப் பாதுகாத்து, அவரைக் கீழ்ப்படிபவர்களிடமிருந்து எவ்வாறு செயல்படுகிறார் என்பதைக் காட்டுகிறது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை மொழிபெயர்த்தல்)

(மேலும் காண்க: அகாஸ்வேரு, பாபிலோன், மொர்தெகாய், பெர்சியா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H635