ta_tw/bible/names/joshua.md

7.0 KiB

யோசுவா

உண்மைகள்:

யோசுவா என்ற பெயரில் பல இஸ்ரவேல் மனிதர்கள் வேதாகமத்தில் இருந்தார்கள். மோசேயின் உதவியாளராக இருந்த நூனின் குமாரனாகிய யோசுவா மிகவும் நன்கு அறியப்பட்டவர், பின்னர் அவர் தேவனுடைய மக்களுக்கு முக்கிய தலைவராக ஆனார்.

  • வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை ஆராய்வதற்கு மோசே அனுப்பிய பன்னிரண்டு வேவுகாரர்களில் ஒருவராக யோசுவா இருந்தார்.
  • காலேபோடு சேர்ந்து, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைந்து கானானியரைத் தோற்கடிக்க தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிய யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை ஊக்குவித்தார்.
  • பல வருடங்கள் கழித்து, மோசே மரித்த பிறகு, இஸ்ரவேல் ஜனங்களை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு வழிநடத்த யோசுவாவை தேவன் நியமித்தார்.
  • கானானியருக்கு எதிரான முதலாம், மிக பிரபலமான போரில், எரிகோ நகரத்தைத் தோற்கடிக்க யோசுவா இஸ்ரவேலரை வழிநடத்தினார்.

பழைய ஏற்பாட்டின் புத்தகமாகிய யோசுவா, யோசுவா இஸ்ரவேலரை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரச் செய்து, இஸ்ரவேலின் ஒவ்வொரு கோத்திரத்தாரும் வாழும் ஒரு பகுதியை எவ்வாறு நியமித்தார் என்பதை விளக்குகிறது.

  • யோசதாக்கின் மகனாகிய யோசுவா, ஆகாய், சகரியா ஆகியோரின் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது; அவர் எருசலேமின் மதில்களை மறுபடியும் உதவுவதற்குப் பிரதான ஆசாரியராய் இருந்தார்.
  • யோசுவா என்ற பெயரில் பல பிற இனத்தவர்களும் வேதாகமத்திலுள்ள மற்ற இடங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: கானான், ஆகாய், எரிகோ, மோசே, வாக்குப்பண்ணப்பட்ட தேசம், சகரியா

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • __14:4__இஸ்ரவேலர் கானானின் எல்லையை அடைந்தபோது, ​​மோசே இஸ்ரவேலின் கோத்திரத்திற்கு ஒருவராக பன்னிரண்டு பேரைத் தேர்ந்தெடுத்தார். அந்தத் தேசம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு அந்த நாட்டுக்குச் சென்று, உளவு பார்க்கும்படி அவர் அறிவுரைகளை கொடுத்தார்.
  • 14:6 உடனே மற்ற இரண்டு வேவுகாரர்களான காலேபும் __ யோசுவாவும், , "கானானின் மக்கள் உயரமாகவும் வலிமையாகவும் இருக்கிறார்கள் என்பது உண்மைதான், ஆனால் நாம் நிச்சயமாக அவர்களைத் தோற்கடிப்போம்!"
  • 14:8 யோசுவா__ மற்றும் காலெப் தவிர, இருபது வயது அல்லது அதற்கு மேற்பட்ட அனைவருமே இறந்துவிடுவார்கள், வாக்குறுதி அளிக்கப்பட்ட தேசத்தில் நுழைய மாட்டார்கள். "
  • 14:14 மோசே இப்போது வயதானவராக இருந்தார், எனவே தேவன் மக்களை வழிநடத்த அவருக்கு உதவி செய்யும்படி __ யோசுவாவைத் தேர்ந்தெடுத்தார்.
  • 14:15 யோசுவா ஒரு நல்ல தலைவராக இருந்தார், ஏனென்றால் அவர் தேவன் மீது நம்பிக்கை வைத்து கீழ்ப்படிந்தார்.
  • 15:3 யோர்தான் நதியை கடந்து சென்றபின், சக்திவாய்ந்த எரிகோ நகரத்தை எப்படி தாக்க வேண்டுமெனக் தேவன் __ யோசுவாவிடம் சொன்னார்.

சொல் தரவு:

  • Strong's: H3091, G2424