ta_tw/bible/names/zechariahot.md

3.6 KiB

சகரியா (பழைய ஏற்பாடு)

உண்மைகள்:

சகரியா என்பவன், பெர்சியாவுடைய தரியு 1 ன் அரசாட்சியின் போது தீர்க்கதரிசனம் உரைத்த தீர்க்கதரிசியாவான். பழைய ஏற்பாட்டிலுள்ள சகரியாவின் புத்தகம், சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களை, தேவாலயத்தைத் திரும்பவும் கட்டும்படி உற்சாகப்படுத்திய அவருடைய தீர்க்கதரிசனங்களைக் கொண்டுள்ளது.

  • எஸ்றா, நெகேமியா, செருபாபேல் மற்றும் ஆகாய் ஆகியோர் வாழ்ந்த அதே காலகட்டத்தில் தீர்க்கதரிசியாகிய சகரியாவும் வாழ்ந்தார். இவர் பழைய ஏற்பாட்டின் காலத்தில் கொலை செய்யப்பட்ட கடைசித் தீர்க்கதரிசி என்று இயேசுவால் குறிப்பிடப்பட்டார்.
  • தாவீதின் நாட்களில், தேவாலயத்தின் வாசல்காப்பவனாகிய சகரியா என்னும் பெயர் கொண்ட இன்னொரு மனிதனும் இருந்தான்.
  • இராஜாவாகிய யோசபாத்தின் மகன்களில் ஒருவனாகிய சகரியா என்னும் பெயரையுடையவன் தன் சகோதரன் யோராமினால் கொலைசெய்யப்பட்டான்.
  • சகரியா என்னும் பெயர்கொண்ட ஒரு ஆசாரியன், இஸ்ரவேல் மக்கள் விக்கிரக ஆராதனை செய்ததற்காக அவர்களைக் கண்டித்தபோது,அவர் அவர்களால் கல்லெறிந்து கொல்லப்பட்டார்.
  • இராஜாவாகிய சகரியா யெரோபெயாமின் மகன் ஆவான். மேலும் அவன் கொலைசெய்யப்படுவதற்கு முன்பு இஸ்ரவேலை ஆறு மாதங்கள் மட்டும் அரசாட்சி செய்தான்.

(மொழிபெயர்ப்பு யோசனைகள்: பெயர்களை மொழிபெயர்ப்பது

(மேலும் பார்க்க: தரியு, எஸ்றா, யோசபாத், யோராம், நெகேமியா, செருபாபேல்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2148