ta_tw/bible/other/captive.md

5.7 KiB

சிறைப்பிடிக்கப்பட்ட, சிறைப்பிடிக்கப்பட்டவர்கள், சிறைபிடிக்கப்பட்ட, சிறைப்பிடிக்கப்பட்டவர்கள், சிறைப்பிடிப்பு

வரையறை:

"சிறைப்பிடிக்கப்பட்ட" மற்றும் "சிறையிருப்பு" ஆகியவை மக்களை கைப்பற்றுவதோடு, வாழ விரும்பாத ஒரு வெளிநாட்டிற்குள் எங்காவது வாழ கட்டாயப்படுத்துவதைக் குறிக்கின்றன.

யூதா ராஜ்யத்திலிருந்து இஸ்ரவேலர் 70 ஆண்டுகளாக பாபிலோனிய ராஜ்யத்தில் சிறையாக வைக்கப்பட்டார்கள்.

  • அவர்களை கைப்பற்றிய மக்கள் அல்லது தேசத்திற்காக கைதிகள் வேலை செய்ய வேண்டியிருக்கிறது.
  • தானியேலும் நெகேமியாவும் பாபிலோனிய ராஜாவுக்குப் பணிவிடை செய்த இஸ்ரவேல் சிறைப்பிடிக்கப்பட்டவர்களாக இருந்தார்கள்.
  • "சிறைபிடித்துக்கொள்ளுதல்" என்ற சொற்றொடர் ஒருவரை கைப்பற்றுவதைப் பற்றி பேசுவதற்கு மற்றொரு வழியாகும்.
  • "உங்களை சிறைப்பிடித்துகொண்டு செல்வான்" என்பதை, "உங்களை சிறைபிடித்துச் செல்லும்படி கட்டாயப்படுத்துதல்" அல்லது "கைதிகளாக வேறு நாட்டிற்கு அழைத்துச் செல்லுதல்" என்று மொழிபெயர்க்கலாம்.
  • உருவக அர்த்தத்தில், அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களிடம் ஒவ்வொரு சிந்தனையையும் "சிறைப்படுத்துவதற்கும்" கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிவதற்கும் சொல்கிறார்.
  • பாவம் மூலம் ஒரு நபர் எப்படி 'சிறைப்பிடிக்கப்பட முடியும் என்பதைப் பற்றி அவர் பேசுகிறார், அதாவது பாவத்தின் மூலம் அவர் "கட்டுப்படுத்தப்படுகிறார்" என்பதாகும்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்

  • சூழலைப் பொறுத்து, "சிறைப்பிடிக்கப்பட்ட" என்பதை, "சுதந்திரமாக இருக்க அனுமதிக்கக்கூடாது" அல்லது "சிறையில் வைக்கப்படவேண்டும்" அல்லது "ஒரு வெளிநாட்டு நாட்டில் வாழ வேண்டிய கட்டாயத்திற்கு உட்படவேண்டும்" என்று மொழிபெயர்க்க முடியும்.
  • "கைப்பற்றப்பட்ட" அல்லது "சிறைப்பிடிக்கப்பட்ட" என்ற சொற்றொடரை, "கைப்பற்றப்பட்ட" அல்லது "சிறைவைக்கப்பட்ட" அல்லது "ஒரு வெளிநாட்டுக்கு செல்ல நிர்பந்திக்கப்பட்டது" என மொழிபெயர்க்கலாம்.
  • "கைதிகளை" என்ற வார்த்தை "கைப்பற்றப்பட்டவர்கள்" அல்லது "அடிமைப்படுத்தப்பட்ட மக்களை என்று" மொழிபெயர்க்கலாம்.
  • சூழலைப் பொறுத்து, "சிறைவாசம்" என்பது "சிறைவைக்கப்படுதல்" அல்லது "நாடுகடத்தப்படுதல்" அல்லது "ஒரு வெளிநாட்டு நாட்டில்இருக்க கட்டாயப்படுத்தப்படுதல்" என மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: பாபிலோன், சிறையிருப்பு, சிறைச்சாலை, கைப்பற்றுதல்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1123, H1473, H1540, H1546, H1547, H2925, H6808, H7617, H7622, H7628, H7633, H7686, H7870, G161, G162, G163, G164, G2221