ta_tw/bible/names/judah.md

2.8 KiB

யூதா

உண்மைகள்:

யூதாவின் மூத்த மகன்களில் யூதா ஒருவர். அவரது தாயார் லேயாள். அவரது சந்ததியினர் "யூதாவின் கோத்திரம்" என அழைக்கப்பட்டனர்.

  • தன் இளைய சகோதரனாகிய யோசேப்பை, ஒரு ஆழமான குழியிலேபோட்டு சாகடிப்பதற்க்குப் பதிலாக அடிமையாக விற்றுவிடலாம் என்று யூதா தன் சகோதரர்களிடம் சொன்னான்.
  • தாவீது ராஜாவும் அவருக்குப் பின் எல்லா ராஜாக்களும் யூதாவின் சந்ததியாராக இருந்தார்கள். இயேசுவும் யூதாவின் சந்ததியாராக இருந்தார்.
  • சாலொமோன் ஆட்சி முடிவடைந்து, இஸ்ரவேல் தேசமாகப் பிரிந்தபோது, ​​யூதாவின் ராஜ்யம் தெற்கு ராஜ்யம் ஆனது.
  • வெளிப்படுத்துதல் என்ற புதிய ஏற்பாட்டின் புத்தகத்தில், "யூதாவின் சிங்கம்" என்று இயேசு அழைக்கப்படுகிறார்.
  • "யூதா" மற்றும் "யூதேயா" வார்த்தைகள் "யூதா" என்ற பெயரிலிருந்து வந்தன.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: யாக்கோபு, யூதர், யூதா, யூதேயா, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3063