ta_tw/bible/names/melchizedek.md

4.5 KiB

மெல்கிசேதேக்கு

உண்மைகள்:

ஆபிராம் வாழ்ந்த காலத்தின்போது, ​​மெல்கிசேதேக்கு சாலேம் நகரத்தின் (பின்னர் "எருசலேம்)இராஜாவாக இருந்தார்.

  • மெல்கிசேதேக்கின் பெயரின் அர்த்தம் "நீதியின் ராஜா" மற்றும் "சாலேமின் ராஜா" என்பதன் அர்த்தம் "சமாதானத்தின் ராஜா" என்று அர்த்தம்.
  • அவர் "மிக உயர்ந்த தேவனுடைய ஆசாரியன்" என்றும் அழைக்கப்பட்டார்.
  • ஆபிராம் தன்னுடைய சகோதரன் லோத்துவை பலம்வாய்ந்த ராஜாக்களிடமிருந்து காப்பாற்றிய பிறகு, ஆபிரகாம் அப்பமும் திராட்சை இரசமும் மெல்கிசேதேக்கிற்கு கொடுத்து சேவை செய்தார் என்று வேதாகமம் முதலில் குறிப்பிடுகிறது. ஆபிரகாம் மெல்கிசேதேக்கிற்கு வெற்றியில் ஒரு பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்.
  • புதிய ஏற்பாட்டில், மெல்கிசேதேக்கு தந்தை அல்லது தாயார் இல்லாதவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் என்றென்றும் ஆட்சி செய்யக்கூடிய ஒரு ஆசாரியன் மற்றும் ராஜா என்று அழைக்கப்பட்டார்.
  • மெல்கிசேதேக்கின் ஆசாரியத்துவத்தின் படி இயேசு ஒரு ஆசாரியன் என்று புதிய ஏற்பாடு கூறுகிறது. லேவி கோத்திரத்திலிருந்து இஸ்ரவேலின் ஆசாரியர்கள் ஏற்ப்படுத்தப்படுவதைப்போல இயேசு ஏற்படுத்தப்படவில்லை. மெல்கிசேதேக்கின் மகனான அவருடைய ஆசாரியத்துவம் நேரடியாக தேவனிடமிருந்து வருகிறது.
  • வேதாகமத்திலுள்ள இந்த விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, மெல்கிசேதேக்கின் ஒரு மனித ஆசாரியன் ஆவார்; அவர் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்லது இயேசுவை முன்னிலைப்படுத்தி, நித்திய ராஜா, நீதியின் மகன் மற்றும் நம்முடைய பிரதான ஆசாரியனாக நியமித்தார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

மேலும் காண்க: ஆபிரகாம், நித்தியஜீவன், பிரதான ஆசாரியன், எருசலேம், லேவியன், ஆசாரியன், நீதிமான்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H4442, G3198