ta_tw/bible/names/levite.md

2.9 KiB

லேவி, லேவியன், லேவியர், லேவிய

வரையறை:

லேவி, யாக்கோபின் அல்லது இஸ்ரவேலின் பன்னிரண்டு குமாரர்களில் ஒருவராக இருந்தார். "லேவியன்" என்ற வார்த்தை, இஸ்ரவேலின் கோத்திரங்களில் ஒருவரான, லேவியின் மூதாதையர் என்பதை குறிக்கிறது.

  • லேவியர்கள் ஆலயத்தை கவனித்து, மத சம்பந்தமான சடங்குகள் நடத்தி, பலிகளையும் ஜெபங்களையும் செலுத்துவதும் பொறுப்பு.
  • அனைத்து யூத ஆசாரியர்களும் லேவியர், லேவி கோத்திரத்தாரும் லேவி கோத்திரத்தைச் சார்ந்தவர்கள். (லேவியர் எல்லாரும் ஆசாரியர்கள் அல்ல. இருப்பினும்)
  • ஆலயத்தில் தேவனைச் சேவிக்கும் விசேஷ வேலைக்காக லேவியராகிய ஆசாரியர்கள் தனியே அர்ப்பணிக்கப்பட்டார்கள்.
  • "லேவி" என்று பெயரிடப்பட்ட மற்ற இரண்டு மனிதர்கள் இயேசுவின் முன்னோர்களே. லூக்கா சுவிசேஷத்தில் அவர்கள் பெயர்கள் மரபுவழி கொடுக்கப்பட்டுள்ளது.
  • இயேசுவின் சீஷரான மத்தேயு லேவி என்றும் அழைக்கப்பட்டார்.

(மேலும் காண்க: மத்தேயு, ஆசாரியன், பலி, தேவாலயம், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3878, H3879, H3881, G3017, G3018, G3019, G3020