ta_tw/bible/kt/holyplace.md

4.9 KiB

பரிசுத்த ஸ்தலம்

வரையறை:

வேதாகமத்தில், "பரிசுத்த ஸ்தலம்",மற்றும் "மகா பரிசுத்த ஸ்தலம்" ஆகியவை, கூடாரம் அல்லது ஆலய கட்டிடத்தின் இரு பாகங்களைக் குறிக்கின்றன.

  • "பரிசுத்த ஸ்தலம்" முதல் அறையாக இருந்தது, அதில் "தூபப் பீடம்" என்ற சிறப்புப் பெட்டியுடன் சமூகத்து அப்ப மேஜையையும் கொண்டிருந்தது.
  • "மகா பரிசுத்த ஸ்தலம்" இரண்டாவது, உள்ளரங்க அறை, அது உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டிருந்தது.
  • ஒரு தடிமனான, கனமான திரை உட்புற அறையிலிருந்து வெளிப்புற அறைகளை பிரிக்கிறது.
  • பிரதான ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குச் செல்ல அனுமதிக்கப்பட்ட ஒரே நபர் ஆவார்.
  • சில சமயங்களில் "பரிசுத்த ஸ்தலம்" என்பது கோவில் அல்லது கூடாரத்தின் கட்டட மற்றும் முற்றத்தில் இருக்கும் பகுதிகளை குறிக்கிறது. இது தேவனுக்குத் தவிர வேறு எந்த இடத்திற்கும் பொதுவானதாக இருக்கலாம்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "பரிசுத்த ஸ்தலம்" என்ற வார்த்தை "தேவனுக்காக பிரித்தெடுக்கப்பட்ட அறை" அல்லது "தேவனை சந்திக்க விசேஷ அறை" அல்லது "தேவனுக்கு ஒதுக்கப்பட்ட இடமாக" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • "மகா பரிசுத்த ஸ்தலமானது" என்ற வார்த்தை "தேவனுக்கான இடம்" அல்லது "தேவனைச் சந்திக்க சிறப்பான இடம்" என்று மொழிபெயர்க்கலாம்.
  • சூழமைவைப் பொறுத்து, "பரிசுத்த ஸ்தலத்திற்கு" பொது மொழிபெயர்ப்பு என்ற சொற்றொடரை "பரிசுத்த ஸ்தலத்தில்" அல்லது "தேவனுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இடம்" அல்லது "தேவாலய வளாகத்தில் ஒரு இடம்" அல்லது " தேவனின் புனித ஆலயத்தின் முற்றத்தில். என்று மொழிபெயர்க்கப்படலாம். "

மேலும் காண்க: தூபபீடம், உடன்படிக்கைப் பெட்டி, அப்பம், பரிசுத்த, பிரகாரம், திரைச்சீலை, பரிசுத்த, பிரித்தெடுக்கப்பட்ட, ஆசரிப்புக்கூடாரம், தேவாலயம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1964, H4720, H4725, H5116, H6918, H6944, G39, G40, G3485, G5117