ta_tw/bible/other/curtain.md

3.8 KiB

திரை, திரைச்சீலைகள்

வரையறை:

வேதாகமத்தில் "திரைச்சீலை" என்ற வார்த்தை, கூடாரத்தையும் ஆலயத்தையும் அமைப்பதில் பயன்படுத்தப்படும் ஒரு மிகத் தடித்த, கனமான பொருள் ஆகும்.

  • மேல்புறத்திலும் பக்கங்களிலும் நான்கு அடுக்கு திரைச்சீலைகள் இருந்தன. இந்த திரைச்சீலைகள் துணி அல்லது விலங்குகளின் தோலினால் செய்யப்பட்டிருந்தது.
  • ஆசரிப்புக்கூடார முற்றத்தில் சுற்றியிருந்த ஒரு சுவரை உருவாக்க துணியாலான திரைகளும் பயன்படுத்தப்பட்டன. இந்த திரைச்சீலைகள் ஒருவகை நார் போன்ற பொருளைக் கொடுக்கும் தாவரத்திலிருந்து கிடைக்கும் சணலிலிருந்து தயாரிக்கப்பட்டன.
  • ஆசரிப்புக் கூடாரத்திலும் ஆலய கட்டடத்திலும், பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் இடையே ஒரு தடிமனான துணி தொங்கவிடப்பட்டது. இயேசு மரித்தபோது அற்புதமாக இந்தத் திரை இரண்டு பகுதிகளாக கிழிந்தது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • நவீன கால திரைச்சீலைகள் வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்ட திரைச்சீலைகளிலிருந்து மிகவும் வித்தியாசமானவை என்பதால், வித்தியாசமான வார்த்தைகளை அல்லது திரைச்சீலை விவரிக்கும் வார்த்தைகளைச் சேர்க்க அது மிகவும் தெளிவானதாக இருக்கலாம்.
  • சூழலை பொறுத்து, இந்த வார்த்தை மொழிபெயர்க்கும் வழிகளில், "திரை மூடுதல்" அல்லது "மூடுதல்" அல்லது "தடிமனான துணியால்" அல்லது "விலங்குகளின் தோலினால் மூடுதல்" அல்லது "தொங்கும் துணி" ஆகியவை அடங்கும்.

(மேலும் காண்க: பரிசுத்த ஸ்தலம், ஆசரிப்புக்கூடாரம், தேவாலயம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1852, H3407, H4539, H6532, H7050, G2665