ta_tw/bible/kt/arkofthecovenant.md

4.0 KiB

உடன்படிக்கை பெட்டி, யேஹோவாவின் பேழை

விளக்கம்:

இவ்வார்த்தைகள் விசேசித்த உள்மரத்தினால் செய்யப்பட்டதைக் குறிக்கும், தங்க தகட்டினால் மூடப்பட்டு, உள்ளே பத்து பிரமாணங்கள் எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. இத்துடன் ஆரோனுடைய கோலும் ஒரு பாத்திரத்தில் மன்னாவும் வைக்கப்பட்டிருந்தன.

  • “பேழை” என்ற பதத்தை “பெட்டி” அல்லது “உள்பகுதி” அல்லது “பாத்திரம்” என்றும் மொழிபெயர்க்கலாம்.
  • தேவன் இஸ்ரவேல் மக்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுப்படுத்தும் விதமாக இப்பெட்டி விளங்கியது.
  • இந்த உடன்படிக்கைப்பெட்டி “மகா பரிசுத்த” ஸ்தலத்தில் வைக்கப்பட்டிருந்தது.
  • இந்த உடன்படிக்கைப்பெட்டி வைக்கப்பட்டிருந்த ஆசரிப்பு கூடாரத்தின் மகா பரிசுத்த ஸ்தலம் தேவ பிரசன்னத்தினால் மூடப்பட்டிருந்தது, அங்கிருந்து மோசே இஸ்ரவேல் மக்களுக்காக பரிந்து பேசினான்.
  • ஆசரிப்பு கூடாரத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்தில் உடன்படிக்கை பெட்டி இருக்கும் நாட்களில், வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் பாவநிவாரண பண்டிகையில் பிரதான ஆசாரியன் மாத்திரமே இப்பெட்டியின் அருகே செல்லமுடியும்,
  • அனேக ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் “உடன்படிக்கை கட்டளைகளை” “சாட்சி” என்று நேரிடையாக மொழிபெயர்க்கப்படுகிறது. இது பத்து பிரமாணங்கள் உண்மையில் ஒரு அத்தாட்சி அல்லது சாட்சி என்று குறிப்பிடலாம். இதை “உடன்படிக்கையின் சட்டதிட்டங்கள்” என்றும் மொழிபெயர்க்கலாம்.

(மேலும் பார்க்க: பேழை, உடன்படிக்கை, பாவநிவாரணம், பரிசுத்த ஸ்தலம், அத்தாட்சி)

வேத விளக்கங்கள்:

சொல் தரவு:

  • Strong's: H727, H1285, H3068