ta_tw/bible/kt/ark.md

4.1 KiB

பேழை

வரையறை:

“பேழை” என்ற வார்த்தை எழுத்துப்பூர்வமாக, ஏதாவது ஒரு பொருளை வைத்துக்கொள்ள அல்லது பாதுகாக்க பயன்படும் செவ்வகமான ஒரு பெட்டியைக் குறிக்கிறது. பேழையானது அதன் பயன்பாட்டிற்கு ஏற்றாற்போல பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கலாம்.

  • ஆங்கில வேதாகமத்தில், “பேழை” என்ற வார்த்தை முதன்முதலில், உலகளாவிய பெருவெள்ளத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு நோவா கட்டின மிகப்பெரிய செவ்வக வடிவிலான மரக் கப்பலைக் குறிப்பிடுகிறது. பேழைக்கு தட்டையான அடிப்பாகமும், கூரையும் சுவர்களும் இருந்தன.
  • இந்த வார்த்தையை மொழிபெயர்க்க “மிகப்பெரிய படகு” அல்லது “மிக அகன்ற தெப்பம்” அல்லது சரக்குக் கப்பல்” அல்லது “பெரிய, பெட்டி வடிவம் கொண்ட படகு” என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.
  • மிகப் பெரிய படகு என்பதைக் குறிக்கும் எபிரேய வார்த்தையானது, மோசேயின் தாயார் அவனை வைத்து நைல் நதியின் ஓரத்தில் விடுவதற்காக பயன்படுத்தப்பட்ட கூடை அல்லது பெட்டியைக் குறிப்பதற்கான வார்த்தையைப் போன்றதாகும். இந்த காரியத்தில் இது பொதுவாக “கூடை” என்று மொழிபெயர்க்கப்படுகிறது.
  • ”உடன்படிக்கைப் பெட்டி” என்ற சொற்றொடரில், பெட்டி என்பதற்கு வித்தியாசமான எபிரேய வார்த்தை பயன்படுகிறது. இதை “பெட்டி” அல்லது “பேழை” அல்லது “கொள்கலன்” என்று மொழிபெயர்க்கமுடியும்.
  • ”பேழை” என்பதை மொழிபெயர்க்க வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்கும்போது, ஒவ்வொரு பின்னணியத்திலும் அதன் அளவு என்ன என்றும் அதன் பயன்பாடு என்ன என்பதையும் கருத்தில்கொள்வது அவசியமாகும்.

(மேலும் காண்க: உடன்படிக்கைப் பெட்டி, கூடை)

வேதாகமக் குறிப்புக்கள்:

சொல் தரவு:

  • Strong's: H727, H8392, G2787