ta_tw/bible/other/basket.md

2.6 KiB

கூடை, கூடைகள், நிறைந்த கூடை

விளக்கம்:

"கூடை" என்ற வார்த்தை, நெய்யக்கூடிய பொருளால் பின்னப்பட்ட ஒரு கொள்கலனை குறிக்கிறது.

  • வேதாகமக் காலங்களில், கூடைகள் பட்டை உரிக்கப்பட்ட மர கிளைகள் அல்லது கிளைகள் போன்ற வலுவான தாவர பொருட்களால் பின்னப்பட்டது.
  • ஒரு கூடை, தண்ணீர் புகாதபடி தண்ணீர் உறிஞ்சாத பொருளால் பூசப்பட்டிருக்கும், இதனால் அது மிதக்கக் கூடியதாக இருக்கும்.
  • மோசே ஒரு குழந்தையாக இருந்தபோது, ​​அவருடைய தாயார் தண்ணீர்புகாத கூடை ஒன்றைச் செய்தாள், அதை நைல் ஆற்றின் நாணல்களுக்குள் வைத்தாள்.
  • அந்தக்கதையில் "கூடை" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை நோவா கட்டிய "பேழையைக்" குறிக்கும் அதே வார்த்தையாக இருக்கிறது. இந்த இரண்டு சூழ்நிலைகளில் அதன் பயன்பாட்டின் பொதுவான பொருள் "மிதக்கும் கொள்கலன்" ஆக இருக்கலாம்.

(மேலும் காண்க: பேழை, மோசே, நைல் நதி, நோவா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H374, H1731, H1736, H2935, H3619, H5536, H7991, G2894, G3426, G4553, G4711