ta_tw/bible/names/nileriver.md

4.2 KiB

நைல் நதி, எகிப்தின் நதி, நைல்

உண்மைகள்:

நைல் வடகிழக்கு ஆபிரிக்காவில் மிக நீளமாகவும், அகலமாகவும் உள்ளது. இது குறிப்பாக எகிப்தின் முக்கிய நதி என அறியப்படுகிறது.

  • நைல் நதி எகிப்து வழியாக மத்தியதரைக் கடலில் வடக்கு நோக்கி செல்கிறது.

நைல் ஆற்றின் இரு பக்கங்களிலும் வளமான நிலத்தில் பயிர்கள் நன்கு வளர்கின்றன.

  • பெரும்பாலான எகிப்தியர்கள் நைல் ஆற்றின் அருகே வாழ்கின்றனர், ஏனெனில் உணவுப் பயிர்களுக்கு இது ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கிறது.
  • இஸ்ரவேல் ஜனங்கள் கோசேன் நாட்டில் வாழ்ந்தார்கள், அது மிகவும் வளமானதாக இருந்தது, ஏனென்றால் நைல் நதிக்கு அருகே இருந்தது.
  • மோசே ஒரு குழந்தையாக இருந்தபோது, ​​அவனது பெற்றோர் அவரை ஒரு கூடையிலே வைத்து, நைல் நதியின் மத்தியில், பார்வோனுடைய ஆட்களிலிருந்து அவரை மறைத்து வைத்தார்கள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: எகிப்து, கோசேன், மோசே)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 8:4 எகிப்து நைல் ஆற்றின் குறுக்கே ஒரு பெரிய, சக்தி வாய்ந்த நாடாக இருந்தது.
  • 9:4 பார்வோன் இஸ்ரவேல் மக்களுக்கு பல குழந்தைகள் பிறந்ததைக் கண்டார். எனவே, இஸ்ரவேல் புத்திரர் தமது குழந்தைகள் அனைவரையும் கொல்வதற்காக_நைல்_ நதியில் போட்டுவிடும்படி தம் மக்களை ஆணையிட்டார்.
  • 9:6 அந்த சிறுவனின் பெற்றோர் அவரை மறைக்க முடியாதபோது, ​​அவரை கொலை செய்வதிலிருந்து காப்பாற்றுவதற்காக நைல் ஆற்றின் கரையில் உள்ள பாய்களில் ஒரு மிதக்கும் கூடையிலே அவனை வைத்தார்கள்.
  • 10:3 தேவன் நைல் ஆற்றின் தண்ணீரை இரத்தமாக மாற்றினார், ஆனால் பார்வோன் இன்னும் இஸ்ரவேலரை விட்டுவிடவில்லை.

சொல் தரவு:

  • Strong's: H2975, H4714, H5104