ta_tw/bible/names/egypt.md

4.9 KiB

எகிப்து, எகிப்தியன், எகிப்தியர்கள்

உண்மைகள்:

எகிப்து, ஆப்பிரிக்காவின் வடகிழக்கு பகுதியிலுள்ள கானா நாட்டின் தென்மேற்குகிலுள்ள ஒரு நாடு. ஒரு எகிப்தியன் என்பவன் எகிப்து நாட்டிலுள்ள ஒரு நபர்.

  • பூர்வ காலங்களில், எகிப்து ஒரு சக்திவாய்ந்த, செல்வசெழிப்புள்ள நாடாக இருந்தது.
  • பண்டைய எகிப்து இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது, கீழ் எகிப்து (வட பகுதி நைல் நதி கடலில் கலக்கும் பகுதி) மற்றும் மேல் எகிப்து (தெற்கு பகுதி). பழைய ஏற்பாட்டில், இந்த பகுதிகள் "எகிப்து" மற்றும் "பாத்ரோஸ்" மூல மொழி உரையில் குறிப்பிடப்படுகின்றன.
  • கானானில் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டபோது, ​​இஸ்ரவேலின் முற்பிதாக்கள் தங்கள் குடும்பங்களுக்கு உணவு வாங்க எகிப்திற்குப் பயணம் செய்தார்கள்.

பல நூறு ஆண்டுகளாக இஸ்ரவேலர் எகிப்தில் அடிமைகளாக இருந்தனர்.

  • யோசேப்பும் மரியாளும் ஏரோதுவிடமிருந்து தப்பித்துக்கொள்ளும்படி இளம் குழந்தை இயேசுவுடன் எகிப்திற்கு சென்றார்கள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: மகா ஏரோது, யோசேப்பு, நைல் நதி, முற்பிதாக்கள்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 8:4 அடிமை வர்த்தகர்கள் யோசேப்பை எகிப்திற்கு அழைத்துச் சென்றனர். எகிப்து நைல் ஆற்றின் குறுக்கே ஒரு பெரிய, சக்திவாய்ந்த நாடாக இருந்தது.
  • 8:8 பார்வோன் யோசேப்புடன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார், எனவே எகிப்தில் இரண்டாவது சக்திவாய்ந்த மனிதராக யோசேப்பை ஏற்படுத்தினான்,
  • 8:11 எனவே யாக்கோபு தனது மூத்த மகன்களை உணவு வாங்கும்படி எகிப்திற்கு அனுப்பினார்.
  • 8:14 யாக்கோபு ஒருவயதான மனிதராக இருந்தபோதிலும், அவர் தனது குடும்பத்தினர் அனைவருடனும் எகிப்துக்கு குடியேறி, அவர்கள் அனைவரும் அங்கு வாழ்ந்தார்கள்.
  • 9:1 யோசேப்பு இறந்த பிறகு, அனைத்து உறவினர்களும் எகிப்தில் தங்கினர்.

சொல் தரவு:

  • Strong's: H4713, H4714, G124, G125