ta_tw/bible/names/josephnt.md

6.3 KiB

யோசேப்பு (NT)

உண்மைகள்:

யோசேப்பு இயேசுவின் பூமிக்குரிய தகப்பனாக இருந்தார், அவரை தன்னுடைய மகனாக வளர்த்தார். அவர் ஒரு தச்சு வேலை செய்த ஒரு நீதிமான்.

  • யோசேப்பு மரியாள் என்ற யூதப் பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்தார்; அதன்பிறகு, தேவன் இயேசுவை மேசியாவின் தாயாக ஆக்குமாறு அவரைத் தேர்ந்தெடுத்தார்.
  • ஒரு தேவதூதர், பரிசுத்த ஆவியானவர் அற்புதமாக மரியாள் கர்ப்பமாக இருந்ததென்பதையும், மரியாளின் குழந்தை தேவனுடைய குமாரனாக இருந்ததையும் யோசேப்புக்கு சொன்னார்.
  • இயேசு பிறந்த பிறகு, ஏரோதுவிடமிருந்து தப்பிப்பதற்காக எகிப்திற்கு குழந்தையையும் மரியாளையும் அழைத்துக்கொண்டு போகும்படி ஒரு தேவதூதர் யோசேப்பை எச்சரித்தார்.
  • யோசேப்பும் அவருடைய குடும்பத்தாரும் கலிலேயாவிலிருந்த நாசரேத்திலில் வாழ்ந்தார்கள்; அங்கே அவர் ஒரு தச்சு வேலை செய்தார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: கிறிஸ்து, கலிலேயா, இயேசு, நாசரேத்து, தேவனின் மகன், கன்னி)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 22:4 அவள் (மரியாள்) ஒரு கன்னியாக இருந்தாள். மற்றும் __ யோசேப்பு _ என்ற பெயருடைய ஒருவரை திருமணம் செய்து கொள்ளப்பட்டார்.
  • 23:1 __ யோசேப்பு __, என்ற அந்த மனிதன் மரியாளுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட வராக, நீதியுள்ள மனிதனாக இருந்தான். மரியாள் கர்ப்பமாக இருந்ததைக் கேள்விப்பட்டபோது, ​​அது அவனது குழந்தை அல்ல என்பதை அறிந்திருந்தார். அவர் அவமானப்படுத்த விரும்பவில்லை, அதனால் அவளை அமைதியாக விவாகரத்து செய்ய திட்டமிட்டார்.
  • 23:2 தேவதூதன், "__ யோசேப்பே, மரியாளை உங்கள் மனைவியாக ஏற்றுக்கொள்ள பயப்படாதீர்கள். அவரது கர்ப்பத்தில் உள்ள குழந்தை பரிசுத்த ஆவியானவரால் உண்டான குழந்தை. அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவர் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து இரட்சிப்பார் என்பதற்காக அவரை இயேசு என்று பெயரிடுவீராக.
  • 23:3 எனவே __ யோசேப்பு _மரியாளை மணந்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார், ஆனால் அவள்குழந்தை பெற்றெடுத்த வரை அவர் அவளுடன் உறங்கவில்லை.
  • 23:4 __ யோசேப்பு __ மற்றும் மரியாள் நசரேத்திலிருந்து பெத்லகேமிற்குச் சென்றிருந்தார்கள். ஏனென்றால் அவர்கள் முன்னோர் தாவீதின் சொந்த ஊர் பெத்லகேம்.
  • 26:4 இயேசு சொன்னார், "நான் உங்களிடம் வாசித்த வார்த்தைகள் இப்போதே நடக்கின்றன." அனைத்து மக்களும் ஆச்சரியமடைந்தனர். "இந்த __ யோசேப்பின்__ மகன் அல்லவா?" அவர்கள் சொன்னார்கள்.

சொல் தரவு:

  • Strong's: G2501