ta_tw/bible/names/galilee.md

4.1 KiB

கலிலேயா, கலிலேயன், கலிலேயர்கள்

உண்மைகள்:

சமாரியாவின் வடக்கே இஸ்ரவேலின் வடக்குப் பகுதி கலிலேயா இருந்தது. ஒரு கலிலேயன் கலிலேயாவில் வாழ்ந்த அல்லது கலிலேயாவில் வாழ்ந்த ஒரு நபர்.

  • கலிலேயா, சமாரியா மற்றும் யூதேயா ஆகியவை புதிய ஏற்பாட்டின்கீழ் இஸ்ரவேலின் மூன்று பிரதான மாகாணங்களாக இருந்தன.
  • கலிலேயா கடலோரமாக "கலிலேயாக் கடல்" என்று அழைக்கப்படும் ஒரு பெரிய ஏரி கிழக்கே உள்ளது.
  • கலிலேயாவிலிருந்த நாசரேத்தில்தான் இயேசு வளர்ந்தார்,வாழ்ந்தார்.
  • இயேசுவின் அற்புதங்கள் மற்றும் போதனைகள் கலிலேயா பகுதியில் நிகழ்ந்தன.

(மேலும் காண்க: நாசரேத், சமாரியா, கலிலேயாக் கடல்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 21:10 ஏசாயா தீர்க்கதரிசி, மேசியா கலிலேயாவில் வசிப்பார், உடைந்த இருதயங்களைத் தேற்றி, சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையைக் கூறி, கட்டப்பவர்களை விடுதலையாக்குவார் என்று கூறினார்.
  • 26:1 சாத்தானின் சோதனையை கடந்து பிறகு, இயேசுதான் வாழ்ந்த இடமாகிய கலிலேயா என்ற இடத்திற்கு பரிசுத்த ஆவியானவரின் வல்லமையுடன், திரும்பினார்.
  • 39:6 இறுதியாக, மக்கள், "நீங்கள் இருவரும் கலிலேயாவில் பிறந்தீர்கள் என்றும் நீங்கள் இயேசுவுடன் இருந்தீர்கள் என்றும் எங்களுக்குத் தெரியும்." என்று சொன்னார்கள்.
  • 41:6 அப்பொழுது தேவதூதர்கள் பெண்களிடம், "நீங்கள் போய், சீடர்களிடம், இயேசு மரித்தோரிலிருந்து எழுந்திருக்கிறார்,உங்களுக்கு முன்பாக கலிலேயாவிற்கு வருவார்" என்றார். "

சொல் தரவு:

  • Strong's: H1551, G1056, G1057