ta_tw/bible/names/goshen.md

2.4 KiB

கோசேன்

வரையறை:

எகிப்தின் வடக்குப் பகுதியிலுள்ள நைல் நதியின் அருகே நிலப்பகுதியின் பெயர் கோசேன்.

  • யோசேப்பு எகிப்தில் ஒரு ஆட்சியாளராக இருந்தபோது, ​​கானான் தேசத்திலுள்ள பஞ்சத்திலிருந்து தப்பிப்பதற்காக அவருடைய தகப்பனும் சகோதரர்களும் தங்கள் குடும்பத்தினரும் கோசேனிலே குடியிருந்தார்கள்.
  • அவர்கள் மற்றும் அவர்களது சந்ததியினர் 400 ஆண்டுகளுக்கும் மேலாக கோசேனில் வாழ்ந்து வந்தனர், ஆனால் அவர்கள் எகிப்திய பார்வோனின் அடிமைத்தனத்திற்குள் தள்ளப்பட்டார்கள்.
  • இறுதியாக இஸ்ரவேல் ஜனங்கள் கோசேன் நாட்டை விட்டு வெளியேறி, இந்த அடிமைத்தனத்திலிருந்து தப்பிப்பதற்கு மோசேயை தேவன் அனுப்பினார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: எகிப்து, பஞ்சம், மோசே, நைல் நதி)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1657