ta_tw/bible/other/bread.md

5.0 KiB

அப்பம்

வரையறை:

அப்பம் என்பது தண்ணீர் மற்றும் எண்ணெயுடன் மாவை கலந்து தயாரிக்கப்படும் ஒரு உணவு ஆகும். மாவை பின்னர் ஒரு அப்பமாக வடிவத்தில் செய்யப்பட்டு சுடப்படும்.

  • "அப்பம்" என்ற வார்த்தை பொதுவாக, "அப்பத்துண்டு " என்று அர்த்தம்.
  • ரொட்டி மாவை வழக்கமாக ஈஸ்ட் என்ற உப்பச் செய்யும் பொருள்சேர்த்து உருவாக்கப்படுகிறது.

உப்பச் செய்யும் பொருளாகிய ஈஸ்ட் சேர்க்கப்படாமல் அப்பத்தை தயாரிக்கமுடியும். வேதாகமத்தில் இது "புளிப்பில்லாத அப்பம்" என்று அழைக்கப்படுகிறது, இது யூதர்களின் பஸ்கா உணவாகப் பயன்படுத்தப்பட்டது.

  • வேதாகம காலங்களில் பலருக்கு முக்கிய உணவு ரொட்டியாக இருந்ததால், இந்த வார்த்தை வேதாகமத்தில் பொதுவாக உணவு என்பதைக் குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. (பார்க்கவும்: சினையாகுபெயர்
  • "சமூகத்து அப்பத்தை" என்ற வார்த்தை பன்னிரண்டு அப்பங்களை பரிசுத்த ஸ்தலத்தில், கூடாரத்தில் அல்லது ஆலய கட்டிடத்தில் தேவனுக்கு பலி என்று குறிப்பிடுகிறது. இந்த அப்பங்கள் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களை குறிக்கின்றன. இது "தேவன் அவர்கள் மத்தியில் வாழ்ந்து காட்டிய ரொட்டி" என்று மொழிபெயர்க்கலாம்.
  • உருவக அர்த்தத்தில், "பரலோகத்திலிருந்து வந்த அப்பம்", இஸ்ரவேல் மக்கள் வனாந்திரம் வழியாக அலைந்து கொண்டிருந்த சமயத்தில் தேவன் "மன்னா" என்று அழைக்கப்பட்ட விசேஷ வெள்ளை உணவைக் குறிப்பிட்டார்.
  • இயேசு "வானத்திலிருந்து இறங்கி வந்த அப்பமாகவும்" "ஜீவ அப்பமாகவும்" தன்னை அழைத்தார்.
  • இயேசுவும் அவருடைய சீஷர்களும் பஸ்கா உணவை சாப்பிடுவதற்கு முன்பு ஒன்றாகச் சாப்பிட்டபோது, ​​அவர் புளிப்பில்லாத அப்பங்களை காயமடைந்து, சிலுவையில் அறையப்படப்போகும் அவருடைய சரீரத்திற்கு ஒப்பிட்டார்,.
  • "ரொட்டி" என்ற வார்த்தையை பல முறை பொதுவாக "உணவு" என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: பஸ்கா, ஆசரிப்புக்கூடாரம், தேவாலயம், [புளிப்பில்லாத அப்பம், ஈஸ்ட்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2557, H3899, H4635, H4682, G106, G740, G4286