ta_tw/bible/other/yeast.md

6.2 KiB

ஈஸ்ட், புளிப்பு, புளிப்பாக்குகிறது, புளிப்புள்ள, புளிப்பில்லாத

விளக்கங்கள்

“புளிப்பு” என்பது ரொட்டி மாவை உப்பிப் பெருகச்செய்யும் ஒரு பொருளைக் குறிக்கும் ஒரு பொதுவான வார்த்தையாகும். “ஈஸ்ட்” என்பது விசேஷித்த ஒரு வகையான புளிப்பு ஆகும்.

  • சில ஆங்கில மொழிபெயர்ப்புக்களில், புளிப்பு என்ற வார்த்தையானது, நவீன முறையில் ரொட்டி மாவை வேகவைக்கும் முன்பு காற்றுக் குமிழ்களால் அதை நிரப்பி மாவை உப்பச் செய்யும் பொருளாகிய “ஈஸ்ட்” என்று மொழிபெயர்க்கப்படுகிறது. ஈஸ்ட் மாவு முழுவதும் பரவும்படி மாவுடன் சேர்த்து பிசையப்படுகிறது.
  • பழைய ஏற்பாட்டு காலத்தில், மாவை குறிப்பிட்ட நேரத்திற்கு அப்படியே வைத்திருந்து, புளிப்படையச்செய்யும் அல்லது உப்பச் செய்யும் பொருள் உருவாக்கப்பட்டது.. ஏற்கனவே புளிப்பாக்கப்பட்ட மாவின் சிறுபகுதியை எடுத்து மற்றமாவை புளிப்பாக்குவதற்காக சேமித்து வைக்கப்பட்டது.
  • இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையாக்கப்பட்டபோது, ரொட்டி மாவு உப்பும் வரைக் காத்திருப்பதற்கு போதிய நேரம் அவர்களுக்கு இல்லை, ஆகவே அவர்கள் தங்கள் பயணத்திற்காக புளிப்பில்லாத ரொட்டியை தயாரித்தார்கள். இதை நினைவுகூரும்படி, ஒவ்வொரு வருடமும் யூத மக்கள் புளிப்பில்லாத ரொட்டியைச் சாப்பிட்டு பஸ்காவைக் கொண்டாடுகிறார்கள்.
  • “புளிப்பு” அல்லது “ஈஸ்ட்” என்ற பதம், ஒரு நபருடைய வாழ்க்கையில் பாவம் பரவுவதைப்போல அல்லது பாவம் எவ்வாறு மற்ற மக்களையும் பாதிக்கிறது என்பதை விவரிப்பதற்கு வேதாகமத்தில் உருவகமாகப் பயன்படுகிறது.
  • மேலும் இது, அநேக மக்களுக்குள் பரவி அவர்களைத் தாக்குகிற தவறான உபதேசங்களையும் குறிக்கிறது.
  • “புளிப்பு” என்பது தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்த தாக்கம் ஒரு மனிதனிலிருந்து இன்னொரு மனிதனுக்குப் பரவுவதை நேர்மறையாகக் குறிப்பிடவும் பயன்படுகிறது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்

  • “புளிப்பு” அல்லது “மாவை உப்பி எழச் செய்யும் ஒரு பொருள்” அல்லது “விரிவாக்கும் பொருள்” என்றும் இதை மொழிபெயர்க்கலாம். “எழுதல்” என்ற வார்த்தையை “”விரிவாக்கு” அல்லது “பெரியதாக்கு” அல்லது “உப்பச் செய்” என்றும் கூறலாம்.
  • ரொட்டி மாவை உப்பி எழச் செய்வதற்கு உள்ளூரில் பயன்படுத்தப்படும் பொருள் பயன்படுத்தப்படுமானால் அந்தப் பதத்தைப் பயன்படுத்தலாம். “புளிப்படையச் செய்தல்” என்று அர்த்தத்தைக் கொடுக்கக்கூடிய நன்கு பிரபலமான, பொதுவான சொல் மொழியில் இருந்தால் அதுவே பயன்படுத்துவதற்கு ஏற்ற சொல்லாகும்.

(மேலும் பார்க்க: எகிப்து, பஸ்கா, புளிப்பில்லாத அப்பம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2556, H2557, H4682, H7603, G106, G2219, G2220