ta_tw/bible/kt/unleavenedbread.md

4.4 KiB

புளிப்பில்லாத அப்பம்

விளக்கம்:

“புளிப்பில்லாத அப்பம்” என்ற வார்த்தையானது “ஈஸ்ட்” அல்லது புளிப்பாக மாற்றும் எந்தவொரு பொருளும் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படும் ரொட்டியைக் குறிக்கும். இந்த வகையான அப்பமானது தட்டையானதாக இருக்கும். ஏனென்றால் அதை உப்பி எழச்செய்யும் புளிப்பு அதில் இல்லை.

தேவன், எகிப்தில் இஸ்ரவேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்துசே விடுதலை செய்யும்போது, அப்பங்கள் உப்பி எழும் வரைக் காத்திருக்காமல் எகிப்த்தைவிட்டு உடனே ஓடிப்போகும்படிக் கூறினார். ஆகவே அவர்கள் தங்கள் உணவோடு புளிப்பில்லாத அப்பத்தைச் சாப்பிட்டார்கள். அன்றிலிருந்து வருடாந்திர பஸ்கா பண்டிகையின்போது அந்த நேரத்தை நினைவுகூரும்படி புளிப்பில்லாத அப்பம் பயன்படுத்தப்படுகிறது. புளிப்பு என்பது பாவத்திற்கு ஒப்பனையாக சொல்லப்படுவதால், “புளிப்பில்லாத அப்பம்” என்பது தேவனை கனப்படுத்தும் வாழ்க்கை வாழ்வதற்காக ஒருவருடைய வாழ்க்கையிலிருந்து பாவம் நீக்கப்படுவதைக் குறிக்கிறது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

இந்த வார்த்தையை மொழிபெயர்ப்பதற்கு இன்னொரு முறையில் “ஈஸ்ட் இல்லாத அப்பம்” அல்லது “உப்பி எழாத தட்டையான அப்பம் “ என்றும் மொழிபெயர்க்கலாம். “ஈஸ்ட்” அல்லது “புளிப்பு” என்ற வார்த்தைகளை எப்படி மொழிபெயர்க்கிறீர்களோ அவற்றுடன் இந்த வார்த்தையின் மொழிபெயர்ப்பு முரண்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.. சில சூழ்நிலைகளில் “புளிப்பில்லாத அப்பம்” என்ற வார்த்தை “புளிப்பில்லாத அப்பப்பண்டிகை” யைக் குறிக்கிறது. மேலும் அது போலவும் மொழிபெயர்க்க முடியும்.

மேலும் பார்க்க: அப்பம், எகிப்து, விருந்து, பஸ்கா. வேலைக்காரன், பாவம், ஈஸ்ட்

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H4682, G106