ta_tw/bible/other/peaceoffering.md

2.5 KiB

சமாதான பலி, சமாதான பலிகள்

உண்மைகள்:

ஒரு "சமாதான பலி" இஸ்ரவேலர் செய்யும்படி கட்டளையிட்ட பல பலிகளில் ஒன்று. இது சில நேரங்களில் "நன்றி செலுத்துதல்" அல்லது "ஐக்கிய பலி" என்று அழைக்கப்படுகிறது.

  • இந்த பலியானது, ஒரு குறைபாடும் இல்லாத மிருகத்தை பலியிட்டு, மிருகத்தின் இரத்தத்தை பலிபீடத்தின் மீது தெளிப்பதோடு, விலங்குகளின் கொழுப்புகளையும், விலங்குகளையும் தனித்தனியாக எரிக்கிறது.
  • இந்தப் பலியில், புளிப்புள்ள அப்பமும், புளிப்பில்லாத அப்பமும் சேர்க்கப்பட்டு தகனபலியின் மேல் எரிக்கப்படும்.
  • பலி செலுத்துபவனும் ஆசாரியனும், பலிசெலுத்தப்பட்ட உணவை சாப்பிடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
  • இந்த பலி தேவனுடைய மக்களுடன் ஐக்கியம் கொள்வதைக் குறிக்கிறது.

(மேலும் காண்க: தகன பலி, ஐக்கியம், ஐக்கிய பலி, போஜன பலி, ஆசாரியன், பலி, புளிப்பில்லாத அப்பம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H8002