ta_tw/bible/kt/fellowship.md

3.2 KiB

ஐக்கியம்

வரையறை:

பொதுவாக, " ஐக்கியம் " என்ற வார்த்தை ஒத்த நலன்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு குழுவினரின் உறுப்பினர்களிடையே நட்பான தொடர்புகளை குறிக்கிறது.

  • வேதாகமத்தில், " ஐக்கியம் " என்ற வார்த்தை பொதுவாக கிறிஸ்துவின் விசுவாசிகளின் ஒற்றுமையை குறிக்கிறது.
  • கிறிஸ்தவ கூட்டுறவு என்பது கிறிஸ்துவோடும் பரிசுத்த ஆவியானவரோடும் கொண்டுள்ள உறவு மூலம் ஒருவர் ஒருவருக்கொருவர் உறவு கொண்டிருப்பது.
  • ஆரம்பகால கிறிஸ்தவர்கள் தேவனுடைய வார்த்தையின் போதனைகளைக் கேட்டு, ஒன்றாக சேர்ந்து ஜெபித்து, தங்கள் உடமைகளை பகிர்ந்துகொள்வதன் மூலமும், சாப்பிட்டு சாப்பிடுவதன் மூலமும் தங்கள் ஐக்கியத்தை வெளிப்படுத்தினர்.
  • இயேசுவில் உள்ள விசுவாசத்தின் மூலமாகவும், தேவனுக்கும் ஜனங்களுக்கும் இடையில் உள்ள தடையை நீக்கிய சிலுவையில் அவருடைய தியாக மரணத்தின் மூலம் கிறிஸ்தவர்களும்கூட தேவனுடன் ஐக்கியம் கொள்கிறார்கள்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

" ஐக்கியம் "என்பதை மொழிபெயர்ப்பதற்கான வழிகள் "ஒன்றாகப் பகிர்ந்து கொள்" அல்லது "உறவு" அல்லது "தோழமை" அல்லது "கிறிஸ்தவ சமூகம்" ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கலாம்.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2266, H8667, G2842, G2844, G3352, G4790