ta_tw/bible/names/benjamin.md

2.6 KiB

பென்யமீன், பென்யமீனைச் சேர்ந்தவன், பென்யமீனர்கள்

உண்மைகள்:

பென்யமீன் யாக்கோபுக்கும் அவருடைய மனைவி ராகேலுக்கும் பிறந்த இளைய மகன். அவனுடைய பெயருக்கு, "என் வலது கரத்தின் மகன்" என்று பொருள்.

  • ராகேலுக்கு இரண்டு மகன்களான பென்யமீனும் அவனுடைய மூத்த சகோதரனான யோசேப்பும் மட்டுமே பிறந்தனர். அவள் பென்யமீன் பிறந்த பிறகு மரித்துப்போனாள்.
  • பென்யமீனின் சந்ததியார் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களில் ஒருவராக ஆனார்கள்.
  • ராஜாவாகிய சவுல் பென்யமீனின் இஸ்ரவேல் கோத்திரத்தைச் சேர்ந்தவன்.
  • அப்போஸ்தலன் பவுலும் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: இஸ்ரவேல், யாக்கோபு, யோசேப்பு, பவுல், ராகேல், இஸ்ரேலின் பன்னிரண்டு கோத்திரங்கள்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1144, G958