ta_tw/bible/names/ahab.md

3.3 KiB

ஆகாப்

உண்மைகள்:

கி.மூ. 875 முதல் 854 வரை இஸ்ரவேல் தேசத்தின் வடக்குப் பகுதியை ஆண்ட ஆகாப் இராஜா ஒரு பொல்லாதவன்.

  • ஆகாப் இராஜா அன்னிய தெய்வங்களை தொழுதுக்கொள்ள இஸ்ரவேல் மக்களை தூண்டினான்.
  • ஆகாப் இராஜா இஸ்ரவேல் மக்களை பாவம் செய்ய தூண்டினதினமித்தம் மூன்றரை ஆண்டுகள் பஞ்சம் ஏற்படும் என்று எலியா தீர்க்கதரசி சபித்தான்.
  • ஆகாப் இராஜாவும் அவன் மனைவி யேசபெலும் அநேக பாவங்களை செய்ததுடன், அவர்களுடய அதிகாரத்தை பயன்படுத்தி குற்றமற்றவர்களை கொன்று குவித்தார்கள்.

(மொழிபெயர்ப்பு சிபாரிசிகள்: எப்படி பெயர்களை மொழிபெயர்க்கலாம்

(மேலும் காண்க: பாகால், எலியா, இஸ்ரவேல் தேசம், யேகோவா)

வேதாகமக் குறிப்புகள்:

வேத கதைகளிலிருந்து உதாரணங்கள்:

  • 19:2 ஆகாப் இஸ்ரவேல் தேசத்தை அரசாண்ட காலங்களில் எலியா தீர்கதரசியாக இருந்தான். ஆகாப் இராஜா ஒரு பொல்லாதவனாக இருந்து இஸ்ரவேல் மக்கள் பாகால் என்ற அன்னிய தெய்வத்தை தொழுதுக்கொள்ள தூண்டினான்.
  • 19:3 ஆகாப் இராஜாவும் அவனது இராணுவமும் எலியா தீர்கதரசியை தேடியும் கண்டுபிடிக்க இயலவில்லை.
  • 19:5 மூன்றரை ஆண்டுகளுக்கு பின்பு, தேவன் எலியா தீர்கதரசியை இஸ்ரவேல் தேசதிற்கு திரும்பி ஆகாப்போடு பேசச் சொன்னார் ஏனெனில் தேவன் மறுபடியும் மழையை மறுபடியும் வருவிக்க போகிறார்.

சொல் தரவு:

  • Strong's: H256