ta_tw/bible/names/kingdomofisrael.md

6.3 KiB

இஸ்ரேல் இராச்சியம்

உண்மைகள்:

சாலொமோன் இறந்தபின் இஸ்ரவேல் தேசம் இரண்டு ராஜ்யங்களாக பிரிக்கப்படுகையில் வடக்கு பகுதியாக இருந்த இஸ்ரவேலின் பத்து கோத்திரங்கள் வடக்கு தேசமாக ஆனது..

  • வடக்கில் இஸ்ரவேலின் ராஜ்யம் பத்துக் கோத்திரங்களைக் கொண்டிருந்தது; தெற்கே யூதாவின் ராஜ்யம் இரண்டு கோத்திரங்களைக் கொண்டிருந்தது.
  • இஸ்ரவேலின் ராஜ்யத்தின் தலைநகரம் சமாரியா. இது யூதாவின் ராஜ்யத்தின் தலைநகரான எருசலேமிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.
  • இஸ்ரவேல் ராஜ்யத்தின் எல்லா அரசர்களும் தீயவர்கள். அவர்கள் விக்கிரகங்களையும் பொய்யான கடவுளையும் சேவிக்கும்படி மக்களைத் தூண்டினார்கள்.
  • இஸ்ரவேலரின் ராஜ்யத்தைத் தாக்குவதற்காக தேவன் அசீரியரை அனுப்பினார். அசீரியாவில் வாழ பல இஸ்ரவேலர் கைப்பற்றப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார்கள்.
  • அசீரியர்கள் இஸ்ரவேல் ராஜ்யத்தில் மீதியான ஜனங்களிடையே வாழ வெளிநாட்டவர்களைக் கொண்டுவந்தார்கள். இந்த வெளிநாட்டவர்கள் இஸ்ரவேலர்களுடன் மணவுறவு கொண்டனர், அவர்களுடைய சந்ததியினர் சமாரியரானார்கள்.

(மேலும் காண்க: அசீரியா, இஸ்ரவேல், யூதா](../names/kingdomofjudah.md), எருசலேம், ராஜ்யம், சமாரியா

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 18:8 ரெகொபெயாமுக்கு விரோதமாகக் கலகம் செய்த இஸ்ரவேல் தேசத்தின் மற்ற பத்துக் கோத்திரங்களே, யெரொபெயாமை ராஜாவாக நியமித்தார்கள். அவர்கள் தேசத்தின் வடக்குப் பகுதியிலுள்ள தங்கள் ராஜ்யத்தை நிறுவி, இஸ்ரவேல் இராஜ்ஜியம் என்று அழைக்கப்பட்டது.
  • 18:10 யூதா மற்றும் இஸ்ரவேல் இராஜ்ஜியங் கள் ஒருவருக்கொருவர் எதிரிகள் ஆனார்கள் மற்றும் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் எதிராக போராடினார்கள்.
  • 18:11 புதிய இஸ்ரவேல் இராஜ்ஜியத்தில், எல்லா அரசர்களும் தீயவர்கள்.
  • 20:1 இஸ்ரேல் மற்றும் யூதாவின் இராஜ்ஜியங்கள் இ ரண்டும் தேவனுக்கு எதிராக பாவம் செய்தார்கள்.
  • 20:2 இஸ்ரவேல் இராஜ்ஜியம் ஒரு சக்தி வாய்ந்த, கொடூரமான தேசமாகிய அசீரிய சாம்ராஜ்ஜியத்தால் அழிக்கப்பட்டது,. அசீரியர்கள் பலரை கொன்றனர் இஸ்ரேல்இராஜ்ஜியத்தில் உள்ள, மதிப்பு மிக்க அனைத்தையும் எடுத்து, நாட்டின் பெரும்பகுதியை எரித்தனர்.
  • 20:4 பின்னர் அசீரியர்கள் இஸ்ரேல் இராஜ்ஜியத்தினர் இருந்த பகுதியில் அந்நியர்களைக் கொண்டுவந்தனர். அந்நியர்கள் அழிக்கப்பட்ட நகரங்களை மீண்டும் கட்டியெழுப்பியிருந்தார்கள்; மேலும் மீதமிருந்த இஸ்ரவேலர்களுடன் திருமண பந்தத்தை ஏற்ப்படுத்திக்கொண்டனர். வெளிநாட்டவர்களை மணந்த இஸ்ரவேலரின் சந்ததியினர் சமாரியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

சொல் தரவு:

  • Strong's: H3478, H4410, H4467, H4468