ta_tw/bible/names/baal.md

5.7 KiB

பாகால்

உண்மைகள்:

"பாகால்" என்பது "ஆண்டவர்" அல்லது "எஜமான்" என்று பொருள்படும், கானானியரால் வணங்கப்பட்ட முதன்மையான பொய்யான கடவுளின் பெயர் ஆகும்.

  • "பாகால் என்னும் பெயரை தங்களின் பெயர்களோடு இணைத்துக்கொண்ட, உதாரணமாக “பாகால் பேயோர்” என்பது போன்ற உள்ளூர் பொய் தெய்வங்களும் இருந்தன. சில நேரங்களில் இந்த தெய்வங்கள் அனைத்தும் "பாகால்கள்" என்று குறிப்பிடப்படுகின்றன.
  • சிலர் தங்கள் பெயர்களுடன் "பாகால்" என்ற வார்த்தையை உள்ளடக்கிய பெயரைக் கொண்டிருந்தனர்.

பிள்ளைகளை பலியிடுவது வேசிகளைப் பயன்படுத்துவது, போன்ற தீய பழக்கங்களை பாகால் வழிபாடு உள்ளடக்கியது.

  • தங்கள் வரலாற்றின் வெவ்வேறு காலங்களில் இஸ்ரவேலர் பாகால் வணக்கத்தில் ஆழமாக ஈடுபடுத்தப்பட்டார்கள், அவர்களைச் சுற்றியிருந்த புறஜாதி தேசங்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார்கள்.
  • ஆகாபின் அரசாட்சியின் போது, ​​பாகால் இல்லை என்றும் யெகோவாவே உண்மையான ஒரே தேவன் மக்களுக்கு நிரூபிக்க தேவனுடைய தீர்க்கதரிசியாகிய எலியா மக்களுக்கு ஒரு பரீட்சையை வைத்தார்.. இதன் விளைவாக, பாகால் தீர்க்கதரிசிகள் அழிக்கப்பட்டு மக்கள் மீண்டும் கர்த்தரை வணங்கினர்.

(மொழிபெயர்ப்பு ஆலோசனைகள்: பெயர்களை மொழிபெயர்ப்பது எப்படி

(மேலும் பார்க்கவும்: ஆகாப், அஸ்தரோத், எலியா, பொய்யான தெய்வம், வேசி, யாவே)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து உதாரணங்கள்:

  • 19:2 ஆகாப் ஒரு தீய மனிதன், மக்கள் பாகால் என்ற பெயர்கொண்ட ஒரு பொய்யான தெய்வத்திற்கு வழிபாடு செய்ய ஊக்குவித்தார்.
  • 19:6 இஸ்ரவேலின் அனைத்து மக்களும், மற்றும் __பாகாலின்__450 தீர்க்கதரிசிகளும் கர்மேல் மலைக்கு வந்தனர்.. எலியா மக்களை நோக்கி: எதுவரைக்கும் உன் மனதை மாற்றிக்கொள்வாய்? கர்த்தர் தேவனாக இருந்தால், அவரை சேவியுங்கள்! பாகால் தெய்வமானால், அவனை சேவியுங்கள்! "
  • 19:7 பின்னர் எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளை நோக்கி, "ஒரு காளையைக் கொன்று, அதை பலியாக செலுத்துங்கள். ஆனால் நெருப்பு போடக்கூடாது.
  • 19:8 பின்னர் பாகாலின் தீர்க்கதரிசிகள் _பாகாலிடம் __ வேண்டினார்கள், " பாகாலே எங்களுக்கு உத்தரவு அருளும்!"
  • 19:12 எனவே மக்கள் பாகாலின் தீர்க்கதரிசிகளை பிடித்தார்கள். அப்பொழுது எலியா அவர்களைஅங்கிருந்து கொண்டுபோய், அவர்களைக் கொன்றுபோட்டான்.

சொல் தரவு:

  • Strong's: H1120, G896