ta_tw/bible/names/asherim.md

3.4 KiB

அசெரா, அசெரா தூண், அசெரா தூண்கள், , அஸ்தரோத், அஸ்தரோத்கள்

வரையறை:

பழைய ஏற்பாட்டு காலங்களில் கானானிய மக்களால் வழிபடப்பட்ட ஒரு தெய்வத்தின் பெயர் ஆசேரா ஆகும். " அஸ்தரோத் " என்பது "அசெரா" என்பதற்கு இன்னொரு பெயராக இருக்கலாம் அல்லது வேறு தெய்வத்தின் பெயராக இருக்கலாம்.

  • " அசெரா தூண்கள் " என்ற சொல்லானது இந்த தெய்வத்தை குறிப்பிடுவதற்காக செய்வதற்காக செய்யப்பட்ட செதுக்கப்பட்ட மர உருவங்களை அல்லது செதுக்கப்பட்ட மரங்களை குறிக்கிறது.

அசெராவின் கணவன் என கருதப்பட்ட பொய் தெய்வமான பாகாலின் பலிபீடங்களுக்கு அருகே அசெரா தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன. சில மக்க்கள் பாகாலை சூரிய தெய்வத்தைப் போலவும், அசெரா அல்லது அஸ்தரோத்தை சந்திரன் தெய்வமாகவும் வணங்கினர்.

  • அசீரியாவின் அனைத்து சிலைகளையும் அழிப்பதற்காக இஸ்ரவேலருக்கு தேவன் கட்டளையிட்டார்.
  • கிதியோன், ஆசா ராஜா, யோசியா ராஜா போன்ற சில இஸ்ரவேல் இராஜாக்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, இந்த சிலைகளை அழித்து மக்களை வழிநடத்தினார்கள்.
  • ஆனால் ராஜாவாகிய சாலொமோன், மனாசே ராஜா, ஆகாப் ராஜா போன்ற மற்ற இஸ்ரவேல் இராஜாக்கள் அசெராவின்தூண்களை விட்டு விலகாமல், இந்த சிலைகளை வணங்கும்படி மக்களைத் தூண்டினார்கள்.

(மேலும் காண்க: பொய்யான கடவுள், பாகால், கிதியோன், உருவம், சாலொமோன்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H842, H6252, H6253