ta_tw/bible/names/gideon.md

5.7 KiB

கிதியோன்

உண்மைகள்:

எதிரிகளிடமிருந்து இஸ்ரவேல் ஜனங்களை விடுவிப்பதற்காக தேவன் எழுப்பிய ஒரு இஸ்ரவேல் மனிதராக கிதியோன் இருந்தார்.

  • கிதியோன் வாழ்ந்த காலப்பகுதியில், மீதியானியர் என்று அழைக்கப்பட்ட ஒரு குழுவினர் இஸ்ரவேலரைத் தாக்கி, அவர்களுடைய பயிர்களை அழித்துக்கொண்டார்கள்.
  • கிதியோன் பயந்திருந்தாலும், மீதியானியருக்கு எதிராகப் போரிட இஸ்ரவேலரை வழிநடத்த தேவன் அவரைப் பயன்படுத்தினார்.
  • கிதியோன் பொய் கடவுளான பாகாலும் அசேராவிற்கும் உரிய பலிபீடங்களைக் கைப்பற்றி தேவனுக்குக் கீழ்ப்படிந்தார்.
  • தம் எதிரிகளைத் தோற்கடிப்பதற்காக மக்களை அவர் வழிநடத்தினார்; அதுமட்டுமல்லாமல், ஒரே உண்மையான தேவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து வழிபட அவர்களை உற்சாகப்படுத்தினார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: பாகால், அசெரா, விடுதலை, [மீதியான், யெகோவா)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 16:5 கர்த்தருடைய தூதனானவர் கிதியோனை நோக்கி, "பராக்கிரமசாலியே தேவன் உன்னுடனே இருக்கிறார். மீதியானியரிடமிருந்து இஸ்ரவேலைக் காப்பாற்று "என்றார்.
  • 16:6 கிதியோனின் தகப்பன் ஒரு சிலைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பலிபீடம் வைத்திருந்தான். அந்தப் பலிபீடத்தை கிஉடைத்துப் போடும்படி தேவன் சொன்னார்.
  • __16:8__எண்ணமுடியாத அளவு அவர்களில் பலர் (மீதியானியர்கள்) இருந்தனர். இஸ்ரேலியர்கள் அவர்களை எதிர்த்துப் போராட _கிதியோன்_அழைத்தார்.
  • 16:8 __ கிதியோன் _ இஸ்ரவேலரை அவர்களுடன் போரிட அழைத்தார். தேவன் இஸ்ரவேலர்களைக் காப்பாற்றுவார் என்பதற்கு __ கிதியோன் _ தேவனிடம் இரண்டு அடையாளங்களைக் கேட்டார்.
  • 16:10 32,000 இஸ்ரேலிய வீரர்கள் கிதியோனிடம் வந்தனர், ஆனால் தேவன் இது மிகவும் அதிகம் என்றார்.
  • 16:12 பின்னர் கிதியோன் தனது படை வீரர்களிடம் திரும்பி, ஒவ்வொருவரும் ஒரு எக்காளத்தையும், ஒரு களிமண் குடத்தையும் மற்றும் ஒரு தீவட்டியையும் கொடுத்தார்.
  • 16:15 மக்கள் _கிதியோனை_தங்கள் இராஜாவாக ஏற்ப்படுத்த விரும்பினர்.
  • 16:16 பிறகு _ கிதியோன்_தங்கத்தைப் பயன்படுத்தி ஆசாரியர்கள் அணிவது போன்ற சிறப்பான உடையைச் செய்தார். ஆனால் மக்கள் அதை ஒரு விக்கிரகம் போல வணங்க ஆரம்பித்தார்கள்.

சொல் தரவு:

  • Strong's: H1439, H1441