ta_tw/bible/names/midian.md

4.4 KiB

மீதியான், மீதியானியன், மீதியானியர்கள்

உண்மைகள்:

மீதியான், ஆபிரகாமுக்கும் அவன் மனைவி கேத்தூருக்கும் பிறந்த மகன். இது கானான் தேசத்தின் தெற்கே வடக்கு அரேபிய பாலைவனத்தில் அமைந்துள்ள ஒரு மக்கள் குழு மற்றும் பிராந்தியத்தின் பெயர். அந்தக் குழுவினர் "மீதியானியர்" என்று அழைக்கப்பட்டார்கள்.

  • மோசே எகிப்தைவிட்டு வெளியேறியபோது, ​​மீதியானியப் பகுதிக்குச் சென்றார். அங்கு அவர் எத்திரோவின் மகள்களை சந்தித்தார். பின்னர் எத்திரோவின் ஒரு குமாரத்தியை மோசே திருமணம் செய்துகொண்டார்.
  • யோசேப்பு ஒரு மீதியானிய அடிமை வியாபாரிகளால் எகிப்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்.
  • பல வருடங்கள் கழித்து மீதியானியர் கானானிய தேசத்தில் இஸ்ரவேலரைத் தாக்கினார்கள். அவர்களைத் தோற்கடிக்க கிதியோன் இஸ்ரவேலரைத் வழிநடத்தினான்.
  • நவீன அரேபிய பழங்குடியினர் பலர் இந்த குழுவின் சந்ததியினர்.

(மேலும் காண்க அரேபியா](../names/arabia.md), எகிப்து, மந்தை, கிதியோன், எத்திரோ, மோசே)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 16:3 ஆனால் மக்கள் தேவனை மறந்துவிட்டு விக்கிரகங்களை வணங்க ஆரம்பித்தார்கள். எனவே, தேவன் அவர்களை தோற்கடிக்க அருகிலிருந்த எதிரிகளான, மீதியானியர்களை அனுமதித்தார்.
  • __16:4__இஸ்ரவேலர்கள் மிகவும் பயந்தனர், அவர்கள் குகைகளில் ஒளிந்து கொண்டனர், அதனால் ___மீதியானியர்கள் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
  • 16:11 மனிதனின் நண்பன், "இந்த கனவின் அர்த்தம் கிதியோனின் இராணுவம் மீதியானியர்களின் இராணுவத்தை தோற்கடிப்பதாகும்!"
  • 16:14 தேவன் _மீதியானியர்களை கலங்கடித்தார், ஆகவே அவர்கள் தங்களை ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர்.

சொல் தரவு:

  • Strong's: H4080, H4084, H4092