ta_tw/bible/names/jethro.md

3.8 KiB

எத்திரோ, ரெகுவேல்

உண்மைகள்:

" எத்திரோ " மற்றும் " ரெகுவேல் " ஆகிய பெயர்கள் மோசேயின் மனைவியான சிப்போராவின் தகப்பனைக் குறிக்கின்றன. பழைய ஏற்பாட்டில் " ரெகுவேல் " என்று பெயரிடப்பட்ட இரண்டு பேரும் இருந்தனர்.

  • மீதியானின் தேசத்திலிருந்த மோசே ஒரு மேய்ப்பராக இருந்தபோது, ​​ரெகுவேல் என்னும் ஒரு மீதியானியரின் மகளை மணந்தார்.
  • பின்னர் ரெகுவேல் "மீதியானின் ஆசாரியனாகிய எத்திரோ" என்று குறிப்பிடப்படுகிறார். அது " ரெகுவேல் " என்பது அவருடைய குலத்தின் பெயராக இருக்கலாம்.
  • தேவன் மோசேயுடன் எரிகிற முட்செடியிலிருந்து பேசினபோது, ​​மோசே எத்திரோவின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார்;

சில நாட்களுக்குப் பிறகு, இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து காப்பாற்றிய பிறகு, வனாந்தரத்திலுள்ள இஸ்ரவேலருக்கு எத்திரோ வந்து, மக்களுடைய விவகாரங்களைக் குறித்து மோசேக்கு அறிவுரை கூறினார்.

  • தேவன் எகிப்தில் இஸ்ரவேல் மக்களுக்காக செய்த அற்புதங்கள் பற்றி அவர் கேள்விப்பட்டபோது அவர் தேவனை நம்பினார்.

ஏசாவின் மகன்களில் ஒருவன் ரெகுவேல்.

  • பாபிலோனில் இருந்த சிறையிருப்பின் முடிவில் யூதாவில் குடியேறத் திரும்பி வந்த இஸ்ரவேலரின் வம்சத்தாரில் ரெகுவேல் என்ற இன்னொருவர் குறிப்பிடப்படுகிறார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

மேலும் காண்க: சிறையிருப்பு, வம்சம், பாலைவனம், எகிப்து, ஏசா, அதிசயம், மோசே, பாலைவனம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3503, H7467