ta_tw/bible/other/deliverer.md

6.3 KiB

விடுவி, விடுவிக்கிற, விடுவிக்கப்பட்ட, விடுவித்தல், விடுவிப்பவர், விடுதலை

வரையறை:

விடுவிப்பது என்பது அந்த நபரை மீட்பது என்பதாகும் "மீட்பர்" என்ற வார்த்தை, அடிமைத்தனம், அடக்குமுறை அல்லது பிற ஆபத்துகளிலிருந்து மக்களை விடுவிப்பவரைக் குறிக்கிறது. அடிமைத்தனம், ஒடுக்குதல் அல்லது பிற ஆபத்துகளிலிருந்து மக்களை விடுவிப்பது அல்லது தப்புவிப்பது என்பதை "விடுவித்தல்" என்ற சொல் குறிக்கிறது.

  • பழைய ஏற்பாட்டில், தேவன் அவர்களைத் தாக்க வந்த மற்ற குழுக்களுக்கு எதிராக போரிடும்போது இஸ்ரவேலரைப் பாதுகாப்பதற்காக இரட்சகர்களை நியமித்தார்.
  • இந்த விடுவிப்பாளர்களையும் நியாதிபதிகள்" என்றும், நியாயாதிபதிகள் என்ற பழைய ஏற்பாட்டின் புத்தகம்இந்த நியாயாதிபதிகள் இஸ்ரவேலை ஆளுகிற வரலாற்று காலத்தை பதிவுசெய்கிறது.
  • தேவன் ஒரு "விடுவிப்பவர்" என்றும் அழைக்கப்படுகிறார். இஸ்ரவேல் வரலாற்றில் முழுவதும், அவர் தனது மக்களை அவர்கள் எதிரிகளிடமிருந்து விடுவித்தார் அல்லது மீட்டார்.
  • "ஒப்புக்கொடுக்க" அல்லது "ஒப்படைக்க" என்ற வார்த்தையை ஒரு நபரை எதிரியிடம் ஒப்படைப்பதற்கு அதாவது யூதாஸ் யூதத் தலைவர்களிடம் இயேசுவை ஒப்படைத்ததைப்போல் ஒரு வித்தியாசமான அர்த்தம் உண்டு,.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • மக்கள் தங்கள் எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்கு உதவுவதன் பின்னணியின் அடிப்படையில், "விடுவித்தல்" என்ற வார்த்தை "மீட்பு" அல்லது "விடுதலை" அல்லது "காப்பாற்று" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • எதிரிக்கு விரோதமாக யாராவது ஒப்புக்கொடுக்க வேண்டுமென்பது அர்த்தம் என்றால், "காட்டிக்கொடுத்தல்" அல்லது "ஒப்படைத்தல்" அல்லது "கொடுத்தல்" என்று மொழிபெயர்க்கலாம்.
  • "மீட்பர்" என்ற வார்த்தை "காப்பாற்றுபவர்" அல்லது "விடுவிப்பவர்" என்றும் மொழிபெயர்க்கப்படலாம்.
  • "மீட்பர்" என்ற வார்த்தை இஸ்ரேலை வழிநடத்திய நியாயாதிபதிகளை குறிக்கும் போது, ​​அது "கவர்னர்" அல்லது "நீதிபதி" அல்லது "தலைவர்" என மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: நீதிபதி, காப்பாற்று)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 16:3 பின்னர் தேவன் அவர்களுக்கு ஒரு இரட்சகரைக் கொடுத்தார். அவர்கள் தங்கள் எதிரிகளை விடுவித்து அந்த தேசத்திற்கு சமாதானத்தைக் கொண்டுவந்தனர்.
  • 16:16 அவர்கள் (இஸ்ரேல்) இறுதியாக மீண்டும் தேவனிடம் உதவி கேட்டனர், தேவன் அவர்களுக்கு மற்றொரு இரட்சகனைr அனுப்பினார்.
  • 16:17 பல ஆண்டுகளாக, தேவன் இஸ்ரவேல் மக்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றிய பல இரட்சகர்களை அனுப்பினார்.

சொல் தரவு:

  • Strong's: H579, H1350, H2020, H2502, H3052, H3205, H3444, H3467, H4042, H4422, H4560, H4672, H5337, H5338, H5414, H5462, H6299, H6308, H6403, H6405, H6413, H6475, H6487, H6561, H7725, H7804, H8000, H8199, H8668, G325, G525, G629, G859, G1080, G1325, G1560, G1659, G1807, G1929, G2673, G3086, G3860, G4506, G4991, G5088, G5483