ta_tw/bible/other/horn.md

3.9 KiB

கொம்பு, கொம்புகள், உயர்த்தப்பட்ட

உண்மைகள்:

கொம்புகள் நிரந்தரமானவை, கடினமானவை, கால்நடை, செம்மறி, ஆடு, மான் போன்ற பல வகையான விலங்குகளின் தலைகளின்மீது கூர்மையாக வளர்ந்திருக்கும் பகுதியாகிம்.

  • ஆட்டுக்கடாவின் கொம்பு, " கொம்பு இசைக்கருவி" அல்லது "ஷஃபர்" என்று அழைக்கப்படும் இசைக் கருவி உருவாக்கப் பயன்படுகிறது, இது மத விழாக்களைப் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஊதப்படுகிறது..

தூபபீடம் மற்றும் வெண்கலப் பலிபீடத்தின் நான்கு மூலைகளிலும் ஒவ்வொன்றிலும் ஒரு கொம்பு வடிவ வடிவத்தை உருவாக்க தேவன் இஸ்ரவேலரிடம் சொன்னார். இவைகள் "கொம்புகள்" என்று அழைத்தாலும், உண்மையில் அவை விலங்குகளின் கொம்புகள் அல்ல.

  • "கொம்பு" என்ற வார்த்தை சில நேரங்களில் ஒரு கொம்பு போல வடிவமைக்கப்பட்ட "குடுவை" என்று குறிப்பிடுவதற்காக பயன்படுத்தப்பட்டது, அது தண்ணீர் அல்லது எண்ணெய் வைத்திருப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. சாமுவேல் தாவீதை இராஜாவாக அபிஷேகம் செய்ததைப் போல ஒரு ராஜாவை அபிஷேகம்பண்ணுகிறதற்கு எண்ணெக்குடுவை இருந்தது.
  • இந்த வார்த்தை ஒரு ஊதுவதற்காக பயன்படுத்தப்பட்ட கொம்பு என்பதை குறிக்கும் வார்த்தையிலிருந்து வேறுபட்ட வார்த்தையுடன் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.
  • "கொம்பு" என்ற வார்த்தை வலிமை, சக்தி, அதிகாரம், மற்றும் மேன்மை ஆகியவற்றின் அடையாளமாக உருவகப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறது.

(மேலும் காண்க: அதிகாரம், மாடு, மான், ஆடு, சக்தி, மேன்மை, செம்மறி, எக்காளம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's:H3104, H7160, H7161, H7162, H7782, G2768