ta_tw/bible/other/cow.md

4.7 KiB

பசு, பசுக்கள், காளைகள், காளை, கன்று, கன்றுக்குட்டிகள், மந்தை, இளங்காளை, எருது, எருதுகள்

வரையறை:

"பசு," "காளை," "இளங்காளை," "எருது," மற்றும் "மந்தை" அனைத்தும் புல் சாப்பிடும் பெரிய, நான்கு கால் விலங்குகளைக் குறிக்கிறது.

  • இந்த வகையான மிருகத்தின் பெண்பால் "பசு" என்று அழைக்கப்படுகிறது, ஆண் ஒரு "காளை" என்றும், அவைகளுடைய குட்டிகள் "கன்று" என்றும் அழைக்கப்படுகின்றன.
  • வேதாகமத்தில், "சுத்தமான" மிருகங்களிலிருந்து மக்கள் பலிசெலுத்தவும் உண்ணவும் பயன்படுத்தினார்கள். அவர்கள் முதலில் இறைச்சிக்காகவும் மற்றும் பாலுக்காகவும் வளர்த்தனர்.

ஒரு "இளம்மாடு" என்பது ஒரு முதிர்ந்த மற்றும், இன்னும் கன்று ஈனாத பெண் மாடு ஆகும்.

ஒரு "எருது" என்பது விவசாய வேலை செய்ய குறிப்பாகப் பயிற்றுவிக்கப்பட்ட கால்நடை வகையாகும். இந்த வார்த்தையின் பன்மை "எருதுகள்" ஆகும். பொதுவாக காளைகள் ஆண் மற்றும் கருத்தடை செய்யப்பட்டதாகும்.

  • வேதாகமம் முழுவதும், மாடுகள், வண்டி அல்லது கலப்பை இழுக்க ஒரு நுகத்தடியுடன் ஒன்றாக கட்டப்பட்ட விலங்குகளாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
  • நுகத்தடியில் இணைக்கப்பட்டு எருது வேலை செய்வது வேதாகமத்திலுள்ள பொதுவான நிகழ்வு ஆகும், "நுகத்தின் கீழ் இருப்பதற்கான சொற்றொடர்" கடின உழைப்பு மற்றும் உழைப்புக்கான உருவகமாக மாறியது.
  • ஒரு காளை ஒரு ஆண் வகை கால்நடை ஆகும், ஆனால் அது கருத்தடை செய்யப்படவில்லை மற்றும் ஒரு வேலைக்காக பயிற்சியளிக்கப்பட்ட விலங்கு அல்ல.

(மேலும் காண்க: தெரியாதவைகளை மொழிபெயர்ப்பது எப்படி

(மேலும் காண்க: நுகம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H47, H441, H504, H929, H1165, H1241, H1241, H1241, H4399, H4735, H4806, H5695, H5697, H5697, H6499, H6499, H6510, H6510, H6629, H7214, H7716, H7794, H7794, H7921, H8377, H8377, H8450, H8450, G1016, G1151, G2353, G2934, G3447, G3448, G4165, G5022, G5022