ta_tw/bible/other/yoke.md

3.8 KiB

நுகத்தடி, நுகத்தடிகள், நுகம் மாட்டப்பட்ட

விளக்கங்கள்

நுகத்தடி என்பது, உழுவதற்காக அல்லது வண்டி இழுப்பதற்காக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விலங்குகளை ஒருங்கினைப்பதர்க்குப் பயன்படும் மரம் அல்லது உலோகத்தால் ஆன ஒரு துண்டு ஆகும். இந்தப் பதத்திற்கு அநேக உருவக அர்த்தங்களும் இருக்கின்றன.

  • “நுகத்தடி” என்ற பதம், மக்கள் ஒன்றாக இணைந்து செய்வதற்கு, குறிப்பாக இயேசுவுக்கு ஊழியம் செய்வதற்கு, மக்களை ஒன்றிணைக்கும் காரியத்தைக் குறிப்பதற்கு உருவகமாக பயன்படுகிறது.
  • பவுல் “கட்டப்பட்டவன்” என்ற வார்த்தையை தான் இருந்ததைப் இதை “உடன்பணியாளர்” அல்லது “சக ஊழியர்” அல்லது “உடன்வேலையாள்” என்றும் மொழிபெயர்க்கலாம்.
  • “நுகத்தடி” என்ற பதம் ஒருவர் சுமக்கும் கடினமான சுமையை, அதாவது அடிமைத்தனத்தினாலோ அல்லது உபத்திரவத்தினாலோ ஒருவர் நெருக்கப்படுவதை குறிப்பிடுவதற்கு உருவகமாக அடிக்கடி பயன்படுகிறது.
  • அநேகப் பின்னணிகளில், இந்தச் சொல்லை விவசாயத்தில் பயன்படும் நுகத்தடியின் உள்ளூர் சொல்லைக் கொண்டு எழுத்தின்படியாக மொழிபெயர்ப்பது சிறந்தது.
  • இந்தச் சொல்லின் உருவகப் பயன்பாட்டை. பின்னணியை அடிப்படையாகக்கொண்டு மற்ற வழிகளில் “ஒடுக்குகிற சுமை” அல்லது “அதிகமான சுமை”, அல்லது “பிணைப்பு” என்று மொழிபெயர்க்கலாம்

(மேலும் பார்க்க: கட்டு, சுமை, ஒடுக்கு, உபத்திரவப்படுத்து, வேலையாள்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3627, H4132, H4133, H5674, H5923, H6776, G2086, G2201, G2218, G4805