ta_tw/bible/other/burden.md

3.1 KiB

சுமை, சுமைகள், சுமைசுமத்தப்பட்ட, சுமத்து

வரையறை:

ஒரு சுமை என்பது ஒரு கனமான பாரமாகும். ஒரு விலங்கு செய்யும் வேலை போன்ற உடல் ரீதியான சுமையை குறிக்கிறது. "சுமை" என்ற வார்த்தைக்கு பல உருவக அர்த்தங்கள் உள்ளன:

  • ஒரு நபர் செய்ய வேண்டிய கடினமான வேலை அல்லது முக்கியமான பொறுப்பு ஒரு சுமையை குறிக்கலாம். அவர் "தாங்குவது" அல்லது "சுமப்பது" என்று கூறப்படுகிறார்.
  • ஒரு கொடூரமான தலைவர் அவர் ஆளும் மக்கள்மீது கடினமான சுமைகளைச் சுமத்தக்கூடும், உதாரணத்திற்கு வரிகளை அதிக அளவில் செலுத்தும்படி கட்டாயப்படுத்துகிறார்.
  • மற்றவருக்கு சுமையாக இருக்க விரும்பாத ஒருவர் அந்த நபருக்கு எந்தவொரு பிரச்சனையும் ஏற்படுத்த விரும்பவில்லை. என்று பொருளாகும்.
  • ஒரு நபரின் பாவத்தின் குற்றமானது அவருக்கு சுமையாக இருக்கிறது.
  • "கர்த்தருடைய சுமை" என்பது தேவனுடைய மக்களுக்கு ஒரு தீர்க்கதரிசிமூலமாகத் தரும் "தேவனுடைய செய்தி" என்பதைக் குறிக்கும் உருவகமான வழியாகும்.
  • "சுமை" என்ற வார்த்தை "பொறுப்பு" அல்லது "கடமை" அல்லது "கனமான சுமை" அல்லது "செய்தி" என்று மொழிபெயர்க்க முடியும்.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H92, H3053, H4614, H4853, H4858, H4864, H4942, H5445, H5447, H5448, H5449, H5450, H6006, G4, G916, G922, G1117, G2347, G2599, G2655, G5413