ta_tw/bible/other/destiny.md

5.3 KiB

தீர்மானி, தீர்மானிக்கப்பட்ட, விதி, முன்னறிவிக்கப்பட்ட

வரையறை:

"விதி" என்பது எதிர்காலத்தில் மக்களுக்கு என்ன நடக்கும் என்பதை குறிக்கிறது. யாராவது ஏதாவது செய்ய வேண்டுமென்று "விதிக்கப்பட்டிருந்தால்", அந்த நபர் எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறார் என்பதை தேவன் முடிவு செய்துவிட்டார் என்று பொருளாகும்.

  • தேவன் கோபத்திற்காக ஒரு தேசத்தை "அழிப்பார்" என்று கூறுவதன் அர்த்தம், அதாவது அவர்களுடைய பாவத்தின் காரணமாக அந்த நாட்டைத் தண்டிப்பதற்காக அவர் முடிவு செய்தார் அல்லது குறித்துவிட்டார் என்பதாகும்.

யூதாஸ் அழிக்கப்படுவதற்கு "தீர்மானிக்கப்பட்டுவிட்டான்", அதாவது யூதாஸ் அவனுடைய கலகத்தினால் அழிக்கப்படுவான் என்று தேவன் முடிவு செய்தார் என்பதாகும்.

  • ஒவ்வொரு நபருக்கும் பரலோகத்தில் அல்லது நரகத்தில் ஒரு இறுதியான, நித்திய விதி உள்ளது.
  • பிரசங்கி புத்தகத்தின் எழுத்தாளர், எல்லோருடைய விதியையும் ஒரேமாதிரியாக இருக்கிறது என்று சொன்னால், அதன் பொருள் எல்லா மக்களும் இறுதியில் இறந்துவிடுவார்கள் என்பதாகும்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "கோபத்திற்காக நீ நியமி" என்ற சொற்றொடர் "நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்று முடிவு செய்யப்பட்டது" அல்லது "நீ என் கோபத்தை அனுபவிப்பாய் என்று தீர்மானித்தாய்" என்று மொழிபெயர்க்கலாம்.
  • "பட்டயத்துக்கு முன்குறிக்கப்படுகிறார்கள்" என்ற உருவக அர்த்தமுள்ள சொற்றொடரை " பட்டயத்தால் கொல்லும் எதிரிகளால் அழிக்கப்படுவார் என்று தேவன் முடிவு செய்திருக்கலாம்" அல்லது "தங்கள் எதிரிகள் வாள்களால் அவர்களைக் கொன்றுவிடுவார்கள் என்று தேவன் தீர்மானித்திருக்கிறார்" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • "நீ நியமிக்கப்பட்டிருக்கிற" என்ற சொற்றொடர், " நீ எப்படி இருப்பாய் என்று தேவன் முடிவு செய்துவிட்டார்" என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி மொழிபெயர்க்க முடியும்.
  • சூழலை பொறுத்து, "விதியை" "இறுதி முடிவு" அல்லது "முடிவில் என்ன நடக்கும்" அல்லது "தேவன் முடிவு எடுத்தது நடக்கும்" என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: சிறைப்பிடிக்கப்பட்ட, நித்தியமான, பரலோகம், நரகம், யோவான் ஸ்நானகன், மனந்திரும்புங்கள்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2506, H4150, H4487, H4745, H6256, H4507, G5056, G5087